azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 30 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 30 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Every being that lives in the world strives to possess what it desires and avoid what it dislikes. Know that the Veda instructs how to succeed in both these endeavours. That is to say, it lays down what has to be done and what should not be done. When these prescriptions and prohibitions are followed, one can earn the good and avoid the evil. Veda is concerned with both the material and the spiritual, both this world and the beyond. If the truth must be told, all life is Veda-filled. One cannot but observe its injunctions. Veda is derived from ‘vid’, which means ‘to know’. So Veda means and includes all spiritual knowledge (jnana). People are distinguished from other animals by the spiritual wisdom (jnana) with which they are endowed. Devoid of spiritual wisdom, they are only beasts. (Leela Kaivalya Vahini, Ch 2)
All knowledge, all the principles of right living, all qualities are derived from the Vedas. - Baba
உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும், தான் விரும்பியதைப் பெறவும், விருப்பமில்லாததைத் தவிர்க்கவும் விழைகின்றன. இந்த இரண்டு முயற்சிகளிலும் வெற்றி பெறுவது எப்படி என்பதை வேதங்கள் போதிக்கின்றன என்பதை அறியுங்கள். அதாவது எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்பதை அவை வகுத்துள்ளன. அந்த ஆலோசனைகளையும் வரையறைகளையும் பின்பற்றினால் ஒருவர் நல்லவற்றைப் பெறவும், தீயவற்றைத் தவிர்க்கவும் முடியும். வேதங்கள், உலகியல் மற்றும் ஆன்மிகம், அதாவது இகம்-பரம் ஆகிய இரண்டிற்கும் சம்பந்தப்பட்டவை. யதார்த்தத்தைக் கூறவேண்டுமென்றால் வாழ்க்கையே வேதமயம் தான். எனவே, அதன் கோட்பாடுகளை ஒருவர் பின்பற்றியே ஆக வேண்டும். வேதம் என்ற வார்த்தை ‘வித்’, அதாவது ‘தெரிந்து கொள்வது’ என்ற பதத்திலிருந்து வந்ததாகும். எனவே, அனைத்து ஆன்மிக ஞானமும் சேர்ந்ததுதான் வேதம் ஆகும். மனிதர்கள் பெற்றுள்ள ஆன்மிக ஞானத்தை வைத்துத்தான் பிற மிருகங்களிலிருந்து மாறுபட்டவர்களாக அவர்கள் இனம் கண்டு கொள்ளப்படுகிறார்கள். ஆன்மிக ஞானம் இல்லையென்றால், அவர்கள் மிருகங்களே. (லீலா கைவல்ய வாஹினி, அத்தியாயம்-2)
அனைத்து ஞானமும், தர்ம நெறிகளும், குணங்களும் வேதங்களில் இருந்து பெறப்பட்டவையே. - பாபா