azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Strive to become embodiments of love. Be ready to offer all your capabilities and skills to the Lord of all. It is God's love that rewards you when you engage yourselves in japa, tapa or yaga (Repetition of God's name, penance, ritual of sacrifice). What greater achievement can you strive for than receiving Love Divine from God? The Principle of Love has no trace of ego or blemish. It is fully free from selfish attachments. Whatever Sai does, whatever Sai thinks, whatever Sai says, whatever Sai observes, it is all for your sake, not for Sai's sake. My only desire is your Ananda (joy). Your Ananda is My bliss. I have no joy, apart from your happiness. Whatever thoughts arise in Me are only for the peace and welfare of the world, for the progress of youth, and for creating ideal boys and girls who will lead others along the path. You must dedicate yourselves to rendering enthusiastic service to the people of the world, recognising that the Sai Principle has no egoistic urge. (Divine Discourse, Nov 23, 1982)
'S' stands for 'Sai', 'A' for 'and', 'I' for the aspirant himself (the individual). Thus 'SAI' symbolises the Vedic dictum: Tat Twam Asi (Thou art That). - Baba
ப்ரேமையின் திருவுருவங்களாக ஆவதற்குப் பாடுபடுங்கள். உங்கள் அனைத்து திறன்களையும் திறமைகளையும், சர்வேஸ்வரனுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருங்கள். நீங்கள் ஜபம், தவம், யாகம் ஆகியவற்றில் ஈடுபடும்போது இறைவனின் ப்ரேமையே உங்களுக்கு பலன் தருகிறது. இறைவனின் ப்ரேமையைப் பெறுவதற்குப் பாடுபடுவதை விட மகத்தான சாதனை வேறென்ன இருக்க முடியும்? ப்ரேம தத்துவம் அகங்காரத்தின் சுவடே இல்லாதது, நிர்மலமானது, சுயநலம் அறவே இல்லாதது. சாயி எதைச் செய்தாலும், சாயி என்ன நினைத்தாலும், சாயி எதைச் சொன்னாலும், சாயி எதைக் கடைப்பிடித்தாலும், அனைத்தும் உங்களுக்காகவே அன்றி சாயிக்காக அல்ல. என்னுடைய சுயநலமெல்லாம் உங்கள் ஆனந்தமே. உங்கள் ஆனந்தமே என் ஆனந்தம் என்பதைத் தவிர எனக்கென்று தனிப்பட்ட ஆனந்தம் வேறில்லை. என்னில் எழும் சங்கல்பங்கள் எல்லாம் லோக க்ஷேமத்திற்காகவும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும், மற்றவர்களை வழிநடத்தக் கூடிய இலட்சிய சிறுவர் சிறுமியர்களை உருவாக்குவதற்காகவும் மட்டுமே. எனவே சாயி தத்துவத்தை நன்கு புரிந்து, சாயிக்கு சுயநலமில்லை என்பதை கவனித்து, மேற்கொண்டு நடக்கவுள்ள நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் உலகத்தின் சேவைக்காக நீங்கள் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1982)
'S' என்பது Sai (சாயி), 'A' என்பது And (மற்றும்), 'I' என்பது சாதகனாகிய ‘நான்’. எனவே 'சாயி' என்பது ‘தத்த்வம்அசி' - ‘நீயேஅது’ எனும் வேத மஹாவாக்கியத்தைக் குறிக்கிறது. - பாபா