azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
“Speak the Truth; Follow Righteousness”. These two vital Vedic principles have been obliterated today. Mammon reigns supreme. Wealth is worshipped as God. Malpractices are the offerings made to this deity. Humanness has been sacrificed. There must be a return to human values. Education must aim at promoting these values. Planting the seed of love and fostering the tree of tolerance, students should seek to offer the fruit of peace to society. This should be their primary duty. Students! You do not become educated merely by getting degrees. You will be truly educated only when you render services to the people. Engage yourselves in service to the people. True education is that which equips one for service and not merely for earning wealth. Fill your hearts with compassion. A compassionate heart is the seat of the Divine. (Divine Discourse, Nov 22, 1989)
True education is that which fosters the sense of oneness, draws out one's divine qualities and promotes the blossoming of human personality. - BABA
“சத்யம் வத, தர்மம் சர” - சத்தியத்தையே பேசுங்கள்; தர்மத்தைக் கடைபிடியுங்கள். உயிர்மூச்சு போன்ற இவ்விரு வேதக்கோட்பாடுகளும் இன்று நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. பணமே பிரதானமாகக் கருதப்படுகிறது. தனமே தெய்வமாக வழிபடப்படுகிறது. துர்க்குணங்களே இந்த தெய்வத்திற்கான பூஜை திரவியங்கள். மனிதத்துவமே இங்கு பலியிடப்படுகிறது. ஆனால் நாம் மனித விழுமியங்களுக்கு திரும்பி வந்தாக வேண்டும். கல்வி இந்த விழுமியங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ப்ரேமை எனும் விதையை விதைத்து, சகிப்புத்தன்மை எனும் மரத்தை வளர்த்து, சாந்தி எனும் கனியை சமுதாயத்திற்கு வழங்க மாணவர்கள் முயன்றிட வேண்டும். இதுவே அவர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். மாணவச் செல்வங்களே! வெறும் பட்டங்கள் பெறுவதால் மட்டும் நீங்கள் படித்தவர்களாக ஆவதில்லை. மக்களுக்கு சேவை செய்யும்போது மட்டும்தான் நீங்கள் உண்மையில் படித்தவர்களாக ஆவீர்கள். மக்கள் சேவையில் ஈடுபடுங்கள். உண்மையான கல்வி என்பது ஒருவனை சேவைக்குத் தயார்படுத்த வேண்டுமே அன்றி வெறும் செல்வத்தை ஈட்டுவதற்கு அல்ல. உங்கள் இதயங்களை கருணையால் நிரப்புங்கள். கருணையுள்ள இதயமே இறைவனின் ஆலயமாகும். (தெய்வீக அருளுரை, நவம்பர் 22, 1989)
உண்மையான கல்வி என்பது மனிதப் பண்புகளைப் போஷித்து, திவ்யத்துவத்தை மலரச்செய்து, மானவத்துவத்தை வெளிக்கொணர்வதாகும். - பாபா