azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 19 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 19 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Every woman must be given education in a well-planned manner. She must be able to understand the problems of the country. She must render such service and help as she can, within the limits of her resources and capacity, to the country, community, and family. No nation can be built except on the culture of its women. The coming generation is shaped by the mothers of today; this generation is so full of adharma (unrighteousness) and injustice because their mothers were not vigilant and intelligent enough. Well, past is past. To save the next generation, women must be warned in time and guided to take the ancients as their models. Past, present, or future, for all time, women are the backbone of progress, the heart of the nation, the very breath. They play the chief role in the dharma of life, a key role that is charged with holiness. (Dharma Vahini, Ch 05)
If man follows the example of the woman to imbibe sacred and sacrificial qualities, the world will definitely improve. - Baba
ஒவ்வொரு பெண்ணிற்கும் நன்கு திட்டமிடப்பட்ட கல்வி வழங்கப்பட வேண்டும். நாட்டின் பிரச்சனைகளை அவள் புரிந்து கொள்ளும் அளவிற்கு இருக்க வேண்டும். நாடு, சமூகம் மற்றும் குடும்பத்திற்கு, தன் சக்திக்கு உட்பட்டு தன்னால் இயன்ற சேவையையும் உதவியையும் அவள் செய்ய வேண்டும். எந்த ஒரு நாட்டையும் நிர்மாணிக்க வேண்டுமானால் அந்நாட்டு பெண்கள் தகுந்த பண்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும். வரும் தலைமுறை இன்றைய அன்னையர்களால் உருவாக்கப்படுகிறது. இன்றைய தலைமுறை அதர்மமும் அக்கிரமும் நிறைந்ததாக இருக்கிறது; ஏனெனில் அவர்களது அன்னையர்கள் போதுமான விழிப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் இருக்கவில்லை. போகட்டும், நடந்தது நடந்து விட்டது. அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற, பெண்களை உரிய நேரத்தில் எச்சரித்து, பண்டைய கால பெண்டிரை முன்மாதிரியாகக் கொள்வதற்கு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எந்தக் காலமாக இருந்தாலும் பெண்களே நாட்டினுடைய முன்னேற்றத்தின் முதுகெலும்பு, தேசத்தின் இதயம், அதன் சுவாசம் போன்றவர்கள். இந்த பிரபஞ்ச நாடகத்திற்கு பிரதானமான புனித பாத்திரத்தை வகிப்பவர்கள் பெண்களே! (தர்ம வாஹினி, அத்தியாயம்-5)
பெண்களிடமுள்ள புனிதமான மற்றும் தியாக உணர்வுகள் ஆகியவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு ஆண்களும் பற்றி ஒழுகினால் உலகம் நிச்சயமாக முன்னேறும். - பாபா