azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
If we invite some great man, such as a saint or a learned person to our house, some preparations will have to be made at home, to make it presentable. We have to clean the house and the surroundings before the guest comes to our house. A house which is not clean lacks sacredness and great people would not go to such places. In the same way, if we invited a minister or governor to our village, we would clean the road and decorate the path and keep everything fit and proper for receiving the eminent visitor. If we take so much care and precaution when we invite a person who has only a temporary position, how much more clean should we keep our heart when we invite the very Creator and protector of the world Himself to enter? It is only when we purify our heart that God will be able to enter it. Krishna said: "Arjuna, you are taking Me as the charioteer of your chariot. Take Me as the charioteer of your life. The seat on which I am seated in this chariot is very dean and well decorated. Think how clean and how grand your heart should be to make it a seat for Me if I become the charioteer of your heart." (Divine Discourse, Sep 12, 1984)
You should make an attempt to install God in the temple of your heart. - Baba
யாராவது ஒரு பெரியவரையோ, மஹானையோ அல்லது அறிஞரையோ நாம் நமது இல்லத்திற்கு அழைத்தோம் என்றால் நம் இல்லத்தில் தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி உள்ளது. விருந்தினர் வருவதற்கு முன்பே இல்லத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் நாம் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மையற்ற புனிதமற்ற இல்லத்திற்கு இடங்களுக்கு பெரியோர்கள் செல்ல மாட்டார்கள். அதைப் போல, ஒரு மந்திரியையோ கவர்னரையோ நமது கிராமத்திற்கு அழைத்தோம் என்றால், நாம் சாலையைத் தூய்மைப்படுத்தி, பாதையை அலங்கரித்து, விருந்தினரை வரவேற்பதற்கு ஏற்ப அனைத்தும் சீரும் சிறப்புமாக இருக்குமாறு செய்வோம். ஒரு தாற்காலிகமான பதவியில் உள்ளவரை வரவேற்பதற்கே நாம் இவ்வளவு கவனமும் அக்கறையும் எடுத்துக்கொள்ளும் போது, இவ்வுலகையே படைத்துக் காக்கும் இறைவனை நம் இதயத்தில் பிரவேசிக்கச் செய்யவேண்டுமெனில், நமது இதயத்தை எவ்வளவு பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்? நம்முடைய இதயத்தைத் தூய்மைப்படுத்தினால் தான் இறைவன் அதற்குள் பிரவேசிக்க முடியும். கிருஷ்ணர், “அர்ஜுனா, நீ என்னை உன்னுடைய ரதத்தின் சாரதியாகக் கருதுகின்றாய். உன் வாழ்க்கைக்கே என்னை சாரதியாக ஏற்றுக்கொள். நான் இந்த ரதத்தில் அமர்ந்திருக்கும் இருக்கை மிகவும் சுத்தமாகவும் அலங்கரிக்கப்பட்டும் இருக்கிறது. நான் உனது இதய சாரதியாக ஆக வேண்டும் என்றால், உன் இதயத்தில் அமர்வதற்கு ஏற்ப அது எவ்வளவு பரிசுத்தமானதாகவும் மகத்தானதாகவும் இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்” என்று கூறினார். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 12, 1984)
உங்கள் இதயக்கோவிலில் இறைவனை பிரதிஷ்டை செய்ய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். - பாபா