azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 15 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 15 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Life has been bestowed not just for eating and digesting, roaming and reclining, but, for a far greater purpose - the realisation of Divinity in us, in all that exists around us and even beyond all things that strike our senses! To waste such a life in vain pursuits, in mere sense-pleasures is not the sign of an intelligent person. Deserve the Grace of God by helping the weak and poor, diseased and disabled, distressed and downtrodden. Do not laugh at others or take delight in insulting them or in carrying tales demeaning them. There is no more heinous sin than hurting the feelings of others. Man must develop two qualities: Fear of sin and devotion to God. To cultivate devotion to God, endeavour to mix with good persons, engage yourselves in Namasmarana (chanting of the Divine Name) in the early hours of the day, join choir groups that sing Names of God and move along streets thrilled with joy that wells up when you do so. (Divine Discourse, Jan 28, 1975)
Having attained the sacred human birth, it is unseemly of man to spend his entire life merely for the sake of filling his belly. - Baba
வெறுமனே உண்ணவும், செரிக்கவும், சுற்றித் திரியவும், தூங்கவும் வாழ்க்கை தரப்படவில்லை; ஆனால், நம்முள்ளும் நம்மைச் சுற்றியுள்ளவை அனைத்திலும், நமது புலன்களுக்கு அப்பாற்பட்ட அனைத்துப் பொருள்களிலும் உறையும் தெய்வீகத்தை உணரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவே தரப்பட்டுள்ளது! இவ்வாறான வாழ்க்கையை வீணான ஆசைகளில், வெறும் புலன் இன்பங்களில் வீணாக்குவது ஓர் அறிவுள்ள மனிதனின் அடையாளம் அல்ல. ஏழை எளியோர், நோயுற்றோர், ஊனமுற்றோர், துன்புற்றோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனுடைய அருளுக்குப் பாத்திரமாகுங்கள். பிறரை எள்ளிநகையாடாதீர்கள்; மற்றவர்களை அவமதிப்பதிலோ அல்லது அவர்களை இழிவுபடுத்தும் வதந்திகளைப் பரப்புவதிலோ மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதை விட கொடிய பாவம் வேறு இல்லை. பாவத்திற்கு அஞ்சுதல், பகவானிடம் பக்தி ஆகிய இரண்டு குணங்களை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இறைவன் மீது பக்தியை வளர்த்துக்கொள்ள நல்லவர்களுடன் பழகுங்கள், அதிகாலைப் பொழுதில் நாமஸ்மரணையில் ஈடுபடுங்கள், இறைநாமத்தைப் பாடிக்கொண்டு நகர சங்கீர்த்தனம் செல்வோருடன் சேர்ந்து நீங்களும் பாடி உங்களுள் பொங்கியெழும் ஆனந்தப் பரவசத்துடன் வீதிகளைச் சுற்றி வாருங்கள். (தெய்வீக அருளுரை, ஜனவரி 28, 1975)
புனிதமான மானிடப் பிறவியைப் பெற்ற பிறகு, மனிதன் தனது வாழ்க்கை முழுவதையும் வெறும் வயிற்றை நிரப்புவதற்காக மட்டுமே கழிப்பது தகாது. - பாபா