azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 14 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 14 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The units of the Sri Sathya Sai Seva Organisation must emphasise through example and personal practice that no joy is equal to the joy of sharing, giving and renouncing. You can understand this better when you pay attention to the behaviour of children. They are like realised souls, without attachment. Examine the contents of a child's pocket. You may find a few pebbles, a piece of glass, a twig or a flower. The child gets from these more joy than adults derive from bundles of currency. Children don’t crave to possess and deny others. It doesn’t accumulate for the coming days, or for the mere pleasure of becoming renowned as an accumulator! The child may have a dirt-covered body, but its mind is free from dirt; elders are scrupulous about physical cleanliness but, their minds are cesspools of desire, hate, envy and clogging slush. (Divine Discourse, Nov 24, 1972)
In childlike innocence, there is freedom from all the lies and deceits of the world. That is purity of mind. In that purity dwells truth. - Baba
பகிர்ந்து கொள்ளுதல், கொடுத்தல், பற்றின்றி இருத்தல் ஆகியவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை என்பதை ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் சமிதிகள் ஒரு முன்னுதாரணமாக தனிப்பட்ட சாதனாவின் மூலமாக வலியுறுத்த வேண்டும். குழந்தைகளின் நடத்தையை கவனித்தால் இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். அவர்கள் மஹாத்மாக்கள் போன்று பற்றற்றவர்கள். குழந்தையின் சட்டைப்பையில் உள்ளவற்றைப் பாருங்கள். சில கூழாங்கற்களோ, கண்ணாடி துண்டோ, மரக்குச்சியோ அல்லது பூவோ இருப்பதை நீங்கள் காணலாம். பெரியவர்கள் பணக்கட்டுகளில் இருந்து பெறுவதை விட அதிகமான மகிழ்ச்சியை குழந்தை இவற்றிலிருந்து பெறுகிறது. குழந்தைகள் அவற்றைத் தாங்களே வைத்துக்கொள்ளவோ அல்லது பிறருக்குத் தர மறுக்கவோ விரும்புவதில்லை. அது, எதிர்காலத்திற்காகவோ அல்லது செல்வந்தர் எனப் புகழ் பெற வேண்டும் என்ற மகிழ்ச்சிக்காகவோ சேர்த்து வைத்துக் கொள்வதில்லை! குழந்தையின் உடல் அழுக்காக இருக்கலாம், ஆனால் அதன் மனமோ அப்பழுக்கற்றது; பெரியவர்கள் உடல் சுத்தத்தில் மிதமிஞ்சிய கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் அவர்களின் மனங்களோ, ஆசை, வெறுப்பு, பொறாமை மற்றும் அடை-சேறு தாங்கிய சாக்கடைக்குழிகளாக உள்ளன. (தெய்வீக அருளுரை, நவம்பர் 24, 1972)
குழந்தையின் அப்பாவித்தனத்தில், உலகின் பொய்கள், வஞ்சகங்கள் எல்லாம் இருக்காது. அதுவே மனத்தூய்மை. அந்தத் தூய்மையில்தான் சத்தியம் குடிகொண்டுள்ளது. - பாபா