azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Today we are having Akhanda Bhajan (nonstop twenty-four-hour bhajan by Sai devotees all over the world). This is being done not for the sake of one individual, one nation or one community. It is for the welfare of humanity as a whole! The bhajans that are sung permeate the ether in the form of sound waves and fill the entire atmosphere. Thereby the whole environment gets purified. Breathing in this purified atmosphere, our hearts get purified. Reciting the Lord's name is a process of give and take. Singing the Lord's name should become an exercise in mutual sharing of joy and holiness. It should be remembered that the sounds we produce reverberate in the atmosphere. They remain permanently in the ether as waves and outlast the individual uttering the sounds. Today the atmosphere is polluted by unholy and vicious sounds. This results in the growth of evil thoughts and feelings, which lead to evil deeds. If the atmosphere has to be purified, it must be filled with pure and sacred sounds. Hence the need to cultivate purity in thoughts, words and deeds. (Divine Discourse, Nov 08, 1986)
When all sing bhajans in unison, sacred vibrations are produced. When these fill the world, what changes cannot they bring about? - Baba
இன்று நாம் அகண்ட பஜனை செய்யவுள்ளோம். உலகம் முழுவதும் சாயி பக்தர்களால் 24 மணி நேரம் தொடர்ந்து செய்யப்படும் நாம சங்கீர்த்தனம் ஆகும். இது ஒரு தனி மனிதருக்காகவோ, ஒரு நாட்டிற்காகவோ அல்லது ஒரு சமூகத்திற்காகவோ மட்டுமே செய்யப்படுவதல்ல. இது மனிதகுலம் அனைத்தின் க்ஷேமத்திற்காகவே! பாடப்படும் பஜனைகள் ஒலி அலைகளாக மாறி, வளி மண்டலத்தை ஊடுருவி, பிரபஞ்சம் முழுவதையும் நிரப்புகின்றன. அதனால், சுற்றுச்சூழல் அனைத்தும் பரிசுத்தமாக்கப்படுகிறது. இந்த பரிசுத்தமான சூழலில் சுவாசிப்பதால், நமது இதயங்களும் பரிசுத்தமடைகின்றன. நாம சங்கீர்த்தனம் என்பது கொடுப்பது வாங்கிக்கொள்வது எனும் ஆத்ம சம்பந்தம் ஆகும். இறைவனது திருநாமத்தை பாடுவது, சந்தோஷம் மற்றும் புனிதத்துவத்தைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் ஒரு பயிற்சியாக ஆக வேண்டும். நாம் உருவாக்கும் ஒலிகள் சுற்றுச்சூழலில் எதிரொலிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை வளி மண்டலத்தில் ஒலி அலைகளாக நிரந்தரமாகத் தங்கி, அந்த ஒலிகளை எழுப்பும் மனிதர் மறைந்த பிறகும் கூட நிலைத்திருக்கும். இன்று, சுற்றுச்சூழல் புனிதமற்ற நச்சு ஒலிகளால் மாசடைந்திருக்கிறது. இவை தீய சிந்தனைகள் மற்றும் தீய உணர்வுகளை வளர்த்து, தீய செயல்களுக்கு வழிவகுக்கின்றன. சுற்றுச்சூழல் தூய்மையாக்கப்பட வேண்டும் என்றால் அது பரிசுத்தமான புனிதமான ஒலிகளால் நிரப்பப்பட வேண்டும். எனவே சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களில் தூய்மையை வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. (தெய்வீக அருளுரை, நவம்பர் 08, 1986)
அனைவரும் ஒன்றிணைந்து பஜனைகளைப் பாடும்போது புனிதமான அதிர்வுகள் உண்டாகின்றன. இவை உலகத்தை நிரப்பும் போது, அவற்றால் கொண்டு வர முடியாத நல்மாற்றங்கள் ஏதேனும் உண்டோ? - பாபா