azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

O ye children of immortality! Listen! Listen to the answer given in the message of the sages (rishis) who had the vision of the most majestic of Persons (Purushottama) who dwells beyond the realms of delusion and darkness: O, ye human beings! Brothers! The only means for you to liberate yourselves from the succession of deaths is ‘knowing Him’. Do not imagine that you are sinners, for you are heirs to eternal bliss (ananda). You are images of God, sharers in undiminishable bliss. You are by nature holy, ever-full; you are indeed God moving on the earth. Is there a sin greater than calling such as you sinners? You are dishonouring and defaming yourselves when you acknowledge the appellation ‘sinners’! Arise! Cast off the feeling that you are sheep. Don’t be deluded into that idea. You are the Atma. You are drops of the divine nectar of Immortality, which know neither beginning nor end. All things material are your bondslaves; you are not their bondslaves. (Sathya Sai Vahini, Ch 4)
I am Ananda, Shantam, Dhairyam (Bliss, Equanimity and Courage). Take Me as your I (Real Self); you won't be wrong. - Baba
அழியாப்பெருநிலையின் புதல்வர்களே! கேளீர்! ப்ரமைக்கும் இருளுக்கெல்லாம் அப்பாற்பட்டு குடிகொண்டுள்ள புராண புருஷனாகிய புருஷோத்தமனை தரிசனம் செய்த மகரிஷிகள் அளித்துள்ள செய்தியில் உள்ள பதிலைக் கேளீர்: ஓ மானிடர்களே! சகோதரர்களே! மரணத்தின் சுழற்சியில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி, ‘இறைவனை அறிந்து கொள்வது’ மட்டும்தான். உங்களை பாவிகள் என்று எண்ணித் தலை குனியாதீர்கள், ஏனெனில் நீங்கள் நித்யானந்தத்திற்கு உரிமை உடையவர்கள். நீங்கள் இறைவனின் பிரதிபிம்பங்கள், என்றும் குறையாத ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். நீங்கள் இயல்பிலேயே புனிதமானவர்கள், பரிபூரணமானவர்கள்; நீங்கள் உண்மையில், பூமியில் நடமாடும் தெய்வங்கள். அப்படிப்பட்ட உங்களை, பாவிகள் என்று அழைப்பதை விட மேலான பாவம் வேறு உள்ளதா? ‘பாவிகள்’ என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டால், நீங்கள் உங்களையே அவமதித்து அவமானப்படுத்திக் கொள்கிறீர்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற உணர்வை உதறித் தள்ளுங்கள். அந்தக் கருத்தினால் ப்ரமை அடையாதீர்கள். நீங்கள் ஆத்மாவே. ஆதியும், அந்தமும் இல்லாத தெய்வீக அமிர்தத்தின் துளிகள். பௌதீகமான பொருட்கள் உங்களுடைய அடிமைகளே அன்றி, நீங்கள் அவற்றின் அடிமைகள் அல்ல. (சத்ய சாயி வாஹினி, அத்தியாயம்-4)
நானே ஆனந்தம், சாந்தம், தைரியம். என்னையே உங்களுடைய ஆத்மதத்துவமாக ஏற்றுக்கொள்ளுங்கள்; அது தவறாகாது. - பாபா