azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The increase of three tragedies: Papam, Tapam, and Ajnanam (Sin, Suffering and Ignorance) is a consequence of avoiding the knowledge and practice of Vedanta. The name usually given to the Reality that you are - ‘Rama’, is the cure for all three. Atma is known as Atma-rama because Rama means that which pleases and nothing confers such vast inexhaustible joy as the Atma. So, the word Rama means Atma. That word consists of three components: ‘Ra’, ‘a’ and ‘ma’. 'Ra' is the mystic representative of Agni (Fire) principle; it burns sin into ash, 'a' is the symbol of Surya (Sun) principle; it destroys the darkness of ignorance. 'Ma' is the symbol of the Chandra (Moon) principle; it cools the heat of suffering. So, 'Rama' overcomes all three tragedies and reveals the Truth, Beauty and Goodness. Repeat the Name ‘Rama’ with this significance in mind and you can feel its effect very soon! (Divine Discourse, Apr 22, 1967)
Love for God will dispel ignorance and conceit of man as the sun dispels the morning mist. - Baba
பாபம், தாபம், அஞ்ஞானம், அதாவது பாவம், துன்பம் மற்றும் அறியாமை ஆகிய மூன்று சோகங்கள் அதிகரிப்பது, வேதாந்தத்தின் அறிவையும் பயிற்சியையும் தவிர்ப்பதன் விளைவேயாகும். உங்களின் மெய்யுணர்வுக்கு பொதுவாக அளிக்கப்படும் பெயரான ‘ராம’ எனும் திருநாமமே இம்மூன்றிற்கும் அருமருந்தாகும். ‘ஆத்மா’, ஆத்மா-ராம என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் ராம என்றால் ரமிக்கச் செய்வது என்று பொருள்; மேலும் ஆத்மாவைப் போல பரந்த தீராத ஆனந்தத்தைத் தருவது வேறெதுவும் இல்லை. எனவே ராம என்றாலே ஆத்மா என்றுதான் பொருள். அந்தச் சொல், 'ரா', 'அ' 'ம' என்ற மூன்று கூறுகளைக் கொண்டதாகும். ‘ரா’ என்பது அக்னி தத்துவத்தைக் குறிப்பதாகும்; இது பாவத்தை எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது. ‘அ’ என்பது சூரிய தத்துவத்தைக் குறிக்கிறது; இது அறியாமையெனும் இருளை நீக்குகிறது. ‘ம’ என்பது சந்திர தத்துவமாகும்; இது துன்பத்தின் வெம்மையைத் தணிக்கிறது. எனவே, ‘ராம’ என்பது மூன்று விதமான சோகங்களையும் வென்று, சத்யம், சிவம், சுந்தரம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்த முக்கியத்துவத்தை மனதில் கொண்டு ராமநாமத்தைச் சொல்லுங்கள்; அதன் பலனை மிக விரைவில் நீங்கள் உணர முடியும்! (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 22, 1967)
ஆதவன் அதிகாலைப் பனியை விலக்குவதைப் போல, இறைவன் மீது கொண்டுள்ள ப்ரேமை அறியாமையையும் அகந்தையையும் விலக்கிவிடும். - பாபா