azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Creation involves putting substances together; what is put together must come apart in course of time and get liberated. The individual is created, so disintegration and death will happen. Now, some are born happy; some enjoy healthy, happy lives. Some are born miserable; others are born without hands or legs. Some are born feeble-minded or as defectives. Who hurt them or injured them? God is proclaimed as just and kind. How can such a God be so partial and prejudiced? How can such differential treatment come into the realm ruled by God? Such doubts are natural. The vision of sages of India who moulded thoughts of this land revealed to them that God is not the cause of these differences; they are the consequences of the acts indulged in by the individual in lives previous to the present one! They result in happiness and misery, health and handicaps. Good and bad are self-made, the effects of what was done in previous lives. (Sathya Sai Vahini, Ch 3)
As the action, so is the result. No one can escape from the consequences of one's actions. - Baba
பல பொருட்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்படுவதே சிருஷ்டி எனப்படும். இவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்ட பொருட்கள் காலப்போக்கில் பிரிந்து விடுதலை பெற்றாக வேண்டும். படைக்கப்பட்ட ஜீவாத்மா இறுதியில் மரணமடைந்து தான் ஆக வேண்டுமல்லவா? சிலர் சுகவாசிகளாகப் பிறக்கிறார்கள்; பரிபூரண ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். வேறு சிலர் துர்பாக்கியசாலிகளாகப் பிறக்கிறார்கள்; சிலருக்கு கைகளோ கால்களோ இருப்பதில்லை. சிலர் அறிவிலிகளாகவோ குறையுள்ளவர்களாகவோ பிறக்கிறார்கள். அவர்களை அவ்வாறு படைத்து தண்டித்தவர் யார்? இறைவன் நியாயசீலன் என்றும் தயாமூர்த்தி என்றும் போற்றப்படுகிறான். அப்படிப்பட்ட சமதிருஷ்டி கொண்ட பரமாத்மா எப்படி இவ்வளவு பாரபட்சம் கொண்டவராக இருக்க முடியும்? இறைவன் ஆளும் இந்த உலகமெனும் சாம்ராஜ்யத்தில் இப்படிப்பட்ட பாகுபாடுகள் எப்படி வந்தன? இத்தகைய சந்தேகங்கள் இயல்பானவையே. இந்த பாரத தேசத்தின் சிந்தனைகளை வடிவமைத்த மகரிஷிகளின் ஞானதரிசனம், இந்த வேறுபாடுகளுக்கு இறைவன் காரணம் அல்ல; இப்பிறவிக்கு முந்தைய பிறவிகளில் ஒருவர் ஈடுபட்ட கர்மவினைகளின் விளைவுகளே இவை என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தியது. சுகம்-துக்கம், ஆரோக்கியம்-குறைபாடு ஆகியவை அவற்றின் விளைவுகளே. முந்தைய பிறவிகளில் செய்தவற்றின் விளைவுகளால் நிகழும் நல்லதும் கெட்டதும் ஒருவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டவை ஆகும். (சத்ய சாயி வாஹினி, அத்தியாயம்-3)
செயல் எப்படியோ, விளைவும் அப்படியே. யாராலும் தங்களுடைய செயல்களின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாது. - பாபா