azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 29 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 29 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The love that has Atma as its basis is pure and sublime. Since people are bound by various pseudo-forms of love, they believe themselves to be just individual souls, isolated and individualised, and deprive themselves of the fullness and vastness of divine love. So, people must win the grace of God. When a person secures it, an individual soul will be released from identification with the body and can identify itself with the Atma. This consummation is referred to in the Vedas as ‘liberation from bonds’ (bandha-vicchedana), or ‘release’ (moksha). To battle against the tendency of body identification and win God’s grace as the only means of victory, spiritual exercises have been laid down, such as philosophical inquiry, sense control (dama) and other disciplines of six-fold spiritual discipline. Their practice will ensure the purification of the consciousness; it will then become like a clean mirror that can reflect the object, and the Atma will stand revealed clearly. (Sathya Sai Vahini, Ch 1)
For attainment of the highest wisdom (jnana-siddhi), cleansing of consciousness (chitta-shuddhi) is the royal path. - Baba
ஆத்மாவை ஆதாரமாகக் கொண்ட ப்ரேமை தூய்மையானது உன்னதமானது. மக்கள் ப்ரேமையின் பல்வேறு போலி வடிவங்களால் கட்டுண்டிருப்பதால், அவர்கள் தங்களைத் தனி ஜீவாத்மாக்களாக, தனிமையானவர்களாக, தனிப்பட்டவர்களாக கருதுகிறார்கள்; அதனால் தெய்வீக ப்ரேமையின் பரிபூரணத்துவத்தையும் விசாலத் தன்மையையும் தாங்களே இழந்துவிட்டனர். எனவே, மக்கள் இறைவனின் அருளைப் பெற்றாக வேண்டும். இதை ஒருவர் பெறும்போது, ஜீவாத்மா உடல் பற்றினை விடுத்து ஆத்மபாவத்தை அடைய முடியும். இதைத்தான் வேதங்களில் ‘பந்த-விச்சேதனா’ அதாவது பந்தங்களிலிருந்து விடுதலை அல்லது மோட்சம் என்று குறிப்பிடப்படுகிறது. உடல் மீது பற்றுகொள்ளும் போக்கை எதிர்த்துப் போராடி, அதில் வெற்றி பெறுவதற்கான ஒரே வழியான இறை அருளைப் பெறுவதற்கு, ஆன்மிக சாதனைகளான தத்துவவிசாரணை மற்றும் ‘தமா’ எனப்படும் புலனடக்கம் உள்ளிட்ட ஆறுவிதமான ஆன்மிக சாதனைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பது உள்ளுணர்வின் தூய்மையை உறுதிப்படுத்துகிறது; அதன் பின்னர் அது எந்தப் பொருளையும் பிரதிபலிக்கக் கூடிய சுத்தமான கண்ணாடியைப் போலாகிவிடுவதால், தெளிவான ஆத்ம தரிசனம் கிடைத்து விடுகிறது. (சத்ய சாயி வாஹினி, அத்தியாயம்-1)
ஞானசித்தியைப் பெறுவதற்கு சித்தசுத்தியே ராஜபாட்டையாகும். - பாபா