azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 23 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 23 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The human being is a composite of man and beast and God, and in the inevitable struggle among the three for ascendency, you must ensure that God wins, suppressing the merely human and the lowly beast. This festival of Deepavali is to express gratitude for the defeat of the Naraka (demonic) tendencies in man, which drag him down from Divinity. Naraka is the name for hell, and the asura whose death at the hands of Krishna is celebrated today is called Narakasura, the personification of all the traits of character that obstruct the upward impulses of man. He is said to be the son of Bhumi (the Earth) and he is also called Bhauma. This is very appropriate, for the earth and all attachments for things earthly, lead us down into the regions of pain and grief. Earthly domain and earthly riches are powerless before spiritual domain over the senses, and the spiritual riches of self-knowledge and self-confidence! (Divine Discourse, Oct 24, 1965)
If the mind, without relying on the eternal and ever-pure Atma, follows the demands of the body and the senses, the actions will be demonic. - Baba
மனிதன், மிருகம், இறைவன் - இம்மூன்றின் கலவையே மனிதன்; ஏற்றம் பெறுவதில் இந்த மூன்றின் தவிர்க்க முடியாத போராட்டத்தில், சாதாரண மனிதனையும் கீழான மிருகத்தையும் அடக்கி, இறைவன் வெல்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். மனிதனை தெய்வீகத்திலிருந்து கீழே இழுத்துச் செல்லும் நரகன் எனும் அசுர மனப்பாங்குகள் தோல்வியுற்றதற்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையே தீபாவளி. நரகன் என்பது நரகத்தின் பெயர்; மனிதனை மேம்படுத்தும் உந்துதல்களைத் தடுக்கும் குணாதிசயங்களின் மொத்த உருவமாய் திகழ்ந்த அசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததை இன்று கொண்டாடுகிறோம். அந்த அசுரனே நரகாசுரன் என அழைக்கப்படுகிறான். அவன் பூமாதாவின் புதல்வன் என்பதால், ‘பௌமன்’ என்றும் அழைக்கப்படுகிறான். இது மிகவும் பொருத்தமானதே, ஏனெனில் பூமி மற்றும் பூமிக்குரிய விஷயங்களின் மீதான அனைத்து பற்றுதல்களும், நம்மை துக்கத்திலும் துயரத்திலும் ஆழ்த்திவிடுகின்றன. புலன்கள் மீதான ஆன்மிகத்தின் அதிகாரம், மற்றும் ஆன்மிகச் செல்வங்களான ஆத்மஞானம், ஆத்ம விசுவாசம் ஆகியவற்றின் முன்பாக உலகம் மற்றும் உலகியலான செல்வங்கள் சக்தியற்றவையே. (தெய்வீக அருளுரை, அக்டோபர் 24, 1965)
மனம், நித்ய-நிர்மல ஆத்மாவைச் சார்ந்திராமல், உடல் மற்றும் புலன்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்குமானால், ஆற்றும் செயல்கள் அனைத்தும் அசுரத்தனமாகவே இருக்கும். - பாபா