azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
When the worship of God starts in the shrine room, the first act of yours is 'lighting a lamp’, isn't it? Without a lit lamp, no auspicious ceremony is initiated. When the lamp of love is shining, God manifests! Keep it burning bright and pure, God persists! Allow all to light their lamps from it, you will experience God showering grace! God, first; the world, next; myself last! That is the legitimate sequence for the sadhaka (spiritual aspirant); and, who is not a sadhaka? You have to be one, now or later, so that you can be liberated from this cycle of birth-death! Now, man, in his callousness towards his own welfare, has turned it topsy-turvy! It is 'myself first, the world next and God is last’. Because of this, God is lost too! Hold fast to God, then you will be safe. You can hold fast to him, either through Jnana, Bhakti or Karma marga (paths of knowledge, worship or work). (Divine Discourse, Oct 29, 1970)
Forms of worshipping God differ, for they are shaped by time and place; but love is the basic content of all the forms. - Baba
பூஜை அறையில் இறைவழிபாட்டைத் தொடங்கும் போது, உங்களின் முதல் செயல் ‘தீபம் ஏற்றுவது', அல்லவா? தீபத்தை ஏற்றாமல் எந்த ஒரு சுபநிகழ்ச்சியும் தொடங்கப்படுவதில்லை. ப்ரேமையின் தீபம் பிரகாசிக்கும்போது இறைவன் ப்ரத்யக்ஷமாகிறான்! அது பிரகாசமாகவும் பரிசுத்தமாகவும் எரியட்டும்; இறைவன் அங்கேயே நிலைகொண்டிருப்பான்! அதிலிருந்து அனைவரும் தங்கள் தீபங்களை ஏற்றிக்கொள்ள அனுமதியுங்கள், இறைவன் அருள்மழை பொழிவதை நீங்கள் அனுபவிப்பீர்கள்! முதலில் இறைவன், அடுத்து உலகம், கடைசியில் நான் - அதுவே ஆன்மிக சாதகனுக்கான முறையான வரிசையாகும்; யார் தான் சாதகன் இல்லை? இந்த பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுபட, நீங்கள் இப்போதோ பின்னரோ அப்படிப்பட்ட ஒருவராக ஆகத்தான் வேண்டும்! இப்போது, தன் சொந்த நலனிலேயே அக்கறை இல்லாத மனிதன், அதைத் தலைகீழாக மாற்றிவிட்டான்! அதாவது 'முதலில் நான், அடுத்து உலகம், இறைவன் கடைசியில்’ என்று. இதனால் இறைவனையும் இழந்துவிட்டான்! இறைவனை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள், பின்னர் நீங்கள் பத்திரமாக இருப்பீர்கள். ஞானம், பக்தி, கர்மம் - இவற்றுள் ஏதேனும் ஒரு மார்க்கத்தின் மூலம் அவனை இறுகப்பற்றிக் கொள்ள முடியும். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 29, 1970)
இறை வழிபாட்டு முறைகள் வெவ்வேறானவை, ஏனெனில் அவை காலம் மற்றும் இடத்தினால் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் ப்ரேமையே எல்லா முறைகளின் அடிப்படை அம்சமாகும். - பாபா