azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 21 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 21 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Each religion defines God within the limits it demarcates and then claims to have grasped Him. Like the seven blind men who spoke of the elephant as a pillar, a fan, a rope or a wall, because they contacted but a part and could not comprehend the entire animal, so too, religions speak of a part and assert that their vision is full and total. Each religion forgets that God is all forms and all names, all attributes and all assertions. The religion of humanity is the sum and substance of all these partial faiths; for, there is only one religion and that is the ‘Religion of Love’. The various limbs of the elephant that seemed separate and distinct to the eyeless seekers of its truth were all fostered and activated by one single stream of blood; the various religions and faiths that feel separate and distinct are all fostered by one single stream of love. (Divine Discourse, Jun 19, 1974)
Bodies are many, but life is one. Beings are many, but bliss is one. Religions are many, but Truth is one. - Baba
ஒவ்வொரு மதமும் இறைவனை அவை நிர்ணயித்த வரம்புகளுக்குள் விவரித்துவிட்டு, பின்னர் அவனை அறிந்துகொண்டு விட்டதாகக் கூறிக்கொள்கிறது. யானையின் ஏதோ ஒரு அங்கத்தை மட்டும் தடவிப் பார்த்துவிட்டு, முழு விலங்கையும் புரிந்துகொள்ள முடியாததால், அது ஒரு தூண், விசிறி, கயிறு, சுவர் போன்றது என்று சொல்லிய ஏழு பார்வையற்றவர்களைப் போல, மதங்களும் ஒரு பகுதியைப் பற்றி மட்டுமே பேசி, தங்களுடைய கண்ணோட்டம் தான் முழுமையானது, பூரணமானது என சாதிக்கின்றன. எல்லா நாம ரூபங்களும், குணங்களும், தத்துவங்களும் இறைவனே என்பதை ஒவ்வொரு மதமும் மறந்து விடுகிறது. மனிதகுல மதமே அனைத்து நிறைவற்ற மதங்களின் சாரமாகும்; ஏனெனில் இருப்பது ஒரே ஒரு மதம் தான், அதுவே ‘ப்ரேமை மதம்’. உண்மையைத் தேடிய அந்தப் பார்வையற்றவர்களுக்கு, வெவ்வேறாகவும், தனிப்பட்டவையாகவும் புலப்பட்ட யானையின் பல்வேறு அங்கங்களும் ஒரே இரத்த ஓட்டத்தினால் தான் போஷிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன; அதேபோல, தங்களை வெவ்வேறாகவும் தனித்துவமாகவும் கருதும் பல்வேறு மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் எல்லாம் ஒரே ப்ரேம ப்ரவாகத்தால்தான் பேணப்படுகின்றன. (தெய்வீக அருளுரை, ஜூன் 19, 1974)
உடல்கள் பல, ஆனால் உயிர் ஒன்றே; உயிரினங்கள் பல, ஆனால் பேரானந்தம் ஒன்றே; மதங்கள் பல, ஆனால் சத்தியம் ஒன்றே! - பாபா