azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
There are four different qualities in man: humanness, animal nature, demonic nature and divine nature. When a man follows the dictates of the body, he is prey to his animal nature. When he is subject to the vagaries of the mind, he becomes demonic. When he is following the Atma, he is manifesting his Divinity. When he is governed by all three - the body, the mind and the Atma - he is human. When Ravana fell victim to the promptings of his mind, his demonic nature predominated over his other good qualities as a worshipper of Shiva and master of many sciences. Whenever a desire arises in the mind, one should exercise the power of discrimination and decide whether it is good or bad. This is the way to journey on the spiritual path. Each person must decide for oneself in which state one is placed. (Divine Discourse, Oct 04, 1992)
Education should promote discrimination and humility. - Baba
மனிதனிடம் நான்கு விதமான குணங்கள் உள்ளன: மனித இயல்பு, மிருக இயல்பு, அசுர இயல்பு மற்றும் தெய்வீக இயல்பு. ஒரு மனிதன் உடலின் கட்டளைகளைப் பின்பற்றும்போது, அவன் தனது மிருக இயல்புக்கு இரையாகிறான். மனச்சஞ்சலங்களுக்கு ஆளாகும்போது, அவன் அசுரனாகி விடுகிறான். அவன் ஆத்மாவைப் பின்பற்றும்போது, தனது தெய்வீகத்தை வெளிப்படுத்துகிறான். உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றாலும் அவன் ஆளப்படும்போது மனிதனாக இருக்கிறான். இராவணன் சிவனின் பரமபக்தனாகவும் பல கலைகளையும் சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்தவனாக இருந்தும் கூட, மனதின் தூண்டுதலுக்கு இரையாகியபோது அசுரத்தன்மையே அவனுள் மேலோங்கி இருந்தது. மனதில் ஒரு ஆசை எழும்போதெல்லாம், பகுத்தறியும் சக்தியைப் பயன்படுத்தி, அது நல்லதா கெட்டதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஆன்மிகப் பாதையில் பயணிக்க இதுவே வழி. ஒவ்வொருவரும் தாம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதைத் தாங்களே தான் முடிவு செய்ய வேண்டும். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 04, 1992)
கல்வி, பகுத்தறிவையும் பணிவையும் ஊக்குவிக்க வேண்டும். - பாபா