azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Service to the public is true worship of God. The power of the divine permeates everything. Our journey is from the individual to the Universal, from 'swam' (mine) to 'So-ham' (oneness with God), from 'I' to 'we'. The effulgent Sun can be seen only with his own light. Similarly, only by the grace of the Divine can one obtain a vision of the Divine. No skill, intellectual effort or scholarship is required to experience the Divine. Just as clouds may obscure the Sun, the clouds of egoism, attachment and hatred prevent one from seeing the Divine. Prayer and sadhana are the means by which these clouds are dispersed. Sadhana is the royal road to reach the Divine. Human make-up is a mixture of good and bad traits. One in whom good traits predominate tends to see only the good in others. Those who have equal-mindedness see the good and bad qualities impartially. It is necessary therefore to cultivate good qualities. (Divine Discourse, Feb 11, 1983)
The one who realises his identity with the Divine will not cause hurt to anyone. - Baba
மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான இறைவழிபாடாகும். தெய்வீக சக்தி அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. நமது பயணம் தனிமனிதனில் இருந்து பேருணர்வுக்கும், 'ஸ்வம்' என்பதிலிருந்து 'ஸோ-ஹம்' - அதாவது ‘எனது’ என்பதிலிருந்து ‘இறைவனுடன் இரண்டறக் கலப்பது’ என்பதுக்கும், 'நான்' என்பதிலிருந்து 'நாம்' வரைக்கும் ஆகும். ஒளிரும் சூரியனை அதனுடைய வெளிச்சத்தால் மட்டுமே பார்க்க முடியும். அதுபோலவே இறைவனுடைய அருளால்தான் இறைவனை தரிசிக்க முடியும். தெய்வீகத்தை அனுபவிக்க எந்த திறமையோ, அறிவுபூர்வமான முயற்சியோ அல்லது புலமையோ தேவையில்லை. மேகங்கள் சூரியனை மறைப்பது போல், அகந்தை, விருப்பு, வெறுப்பு ஆகிய மேகங்கள் ஒருவரை இறைவனை தரிசிக்கவிடாமல் தடுக்கின்றன. பிரார்த்தனையும், ஆன்மிக சாதனை ஆகியவையே இந்த மேகங்களைக் கலைக்கக் கூடிய வழிமுறைகளாகும். ஆன்மிக சாதனையே இறைவனை அடைவதற்கான ராஜபாட்டை. மனிதன், நல்ல மற்றும் கெட்ட குணங்களின் கலவை ஆவான். தன்னுள் நல்ல குணாதிசயங்களைக் கொண்டவர் மற்றவர்களின் நல்லதை மட்டுமே பார்க்க முனைகிறார். சமச்சீரான மனோபாவம் கொண்டவர்கள் நல்ல மற்றும் கெட்ட குணங்களை பாரபட்சமின்றிப் பார்க்கிறார்கள். எனவே நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது அவசியம். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 11, 1983)
இறைவனுடன் தன்னை ஒன்றாக உணர்ந்தவர், யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார். - பாபா