azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 13 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 13 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
If your devotion does not stand by you when you seek to revere reflections of God in the body-mirrors that move around you, when you peer into and prostrate before these images of God that parade before you wherever you cast your eyes, how can you claim to be devoted to God? Without steady faith in and sincere practice of this sadhana, if you simply congregate, prepare and share prasadams on every conceivable occasion, or even sing and extol God, I must say that your efforts are all in vain! Expand your hearts. Enlarge your vision. Enlarge the circle of kinship and take more and more of your fellow beings into the tabernacle of your hearts. And adore them in loving worship. Wisdom is only compassion at its highest; for, through empathy you enter the heart of another and understand him through and through. Finding unity in this diversity of roles is true wisdom! (Divine Discourse, Feb 23, 1971)
Eashwara sarva bhuthanam (God dwells in all beings). Recognition of this truth is the essential mark of devotion. – BABA
உங்களைச் சுற்றி நடமாடிக்கொண்டு இருப்பவர்களுள் பிரதிபலிக்கும் இறைவனை நீங்கள் வணங்க முற்படும்போதும், நீங்கள் பார்க்கும் இடங்களில் எல்லாம் தென்படும் இறைவனின் திருவுருவங்களைப் பார்த்து வணங்கும்போதும், உங்களுக்கு பக்தி உணர்வு மேலோங்கவில்லை என்றால் நீங்கள் இறைவன்பால் பக்தி கொண்டவர் என்று எப்படிக் கூறிக்கொள்ள முடியும்? ஆன்மிக சாதனையில் திடநம்பிக்கையும் நேர்மையான பயிற்சியும் இல்லாமல், உங்களுக்குத் தோன்றும்போதெல்லாம் சாதனை செய்கிறோமென்று வெறுமனே அனைவரும் ஒன்றுகூடி, பின் பிரசாதங்களைச் செய்து பகிர்ந்துண்டாலும் அல்லது இறைவனைப் பாடிப் புகழ்ந்தாலும் கூட, உங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணே என்றுதான் நான் சொல்ல வேண்டும்! உங்கள் இதயங்களை விசாலமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையை விரிவாக்கிக் கொள்ளுங்கள். உறவின் வட்டத்தை விரிவுபடுத்தி, மேன்மேலும் உங்கள் சக மனிதர்களை உங்கள் இதயமெனும் கோயிலுக்குள் இட்டுச் செல்லுங்கள். அன்பான ஆராதனையால் அவர்களைப் போற்றுங்கள். ஞானம் என்பது இரக்கத்தின் உச்ச நிலை; ஏனென்றால், ஆழ்ந்த பரிவுணர்வின் மூலம் நீங்கள் மற்றொருவரின் இதயத்தில் இடம் பிடித்து அவரை முழுமையாகப் புரிந்துகொள்கிறீர்கள். இத்தகைய வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதே உண்மையான ஞானமாகும்! (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 23, 1971)
'ஈஸ்வர ஸர்வ பூதானாம்' - இறைவன் எல்லா உயிரினங்களிலும் உறைகின்றான். இந்த உண்மையை உணர்வதே பக்தியின் இன்றியமையாத அடையாளமாகும். - பாபா