azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Many in this world, even among the learned, do not spend their allotted span of life in the pursuit of certain selected ideals. Hence, their earthly careers are like the voyage of a storm-tossed ship that has lost both its anchor and its compass, and is caught in mid-ocean. They are torn between opposing ideals and goals; they listen to diverse appeals, and their lives end in waste and failure, for they say one thing and do another in their ignorance and fear. Meditation gives them a fixity of purpose, courage, and also wisdom. The feelings that arise in the mind, which are classified as serene, restless, and ignorant (sattvic, rajasic, and tamasic), also have to be watched and cleansed. Restlessness and ignorance have to be uprooted. Meditation is the weapon for this task. The path of meditation (dhyana-marga) will destroy ignorance (ajnana), and it will grant the individual union with the Godhead (Brahmaikyata). (Dhyana Vahini, Ch 14)
Meditation stills the agitated mind and makes it clear and full of joy. - Baba
இந்த உலகில் பலர், நன்கு கற்றறிந்தவர்களாக இருந்தாலும் கூட, குறிப்பாக சில தேர்ந்தெடுக்கப்பட்ட இலட்சியங்களுக்காக தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வதில்லை. எனவே, அவர்களுடைய வாழ்க்கைப் பயணம், நடுக்கடலில் புயலில் சிக்கிக்கொண்டு, தனது நங்கூரத்தையும், திசைகாட்டியையும் இழந்து தத்தளிக்கும் கப்பலைப் போல இருக்கிறது. அவர்கள் ஒன்றுக்கொன்று எதிர்மறையான இலட்சியங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார்கள்; அவர்கள் பலவிதமான ஆலோசனைகளுக்கு செவிமடுத்து, அறியாமை மற்றும் அச்சத்தால், சொல்வதொன்றும் செய்வது மற்றொன்றுமாக இருப்பதால், அவர்களுடைய வாழ்க்கை தோல்வியுற்று வீணாகிறது. தியானம் அவர்களுக்கு ஒரு நிலையான குறிக்கோள், தைரியம் மற்றும் ஞானத்தையும் அளிக்கிறது. மனதில் எழும், சாத்விக, ராஜசிக மற்றும் தாமசிக உணர்வுகளையும் கவனித்து, தூய்மைப்படுத்த வேண்டும். சஞ்சலத்தையும் அறியாமையையும் வேரோடு களைய வேண்டும். தியானமே இந்தப் பணிக்கு உகந்த ஆயுதமாகும். தியான மார்க்கம், அறியாமையை அழித்து, ‘ப்ரம்ம ஐக்யதம்’ அதாவது பரமாத்மாவுடனான ஐக்கியத்தை அருளும். (தியான வாஹினி, அத்தியாயம்-14)
தியானம், சஞ்சலப்படும் மனதை சாந்தப்படுத்தி, அதைத் தெளிவாகவும், ஆனந்தமயமாகவும் ஆக்குகிறது. - பாபா