azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
When spiritual power is predominant, the power of Nature is kept under control. When spiritual power is weak, the power of Nature becomes predominant. This is illustrated by the example of smoke and fire. When smoke is predominant, the fire is suppressed. When the fire is blazing, the smoke vanishes. Hence, to enhance the power of the Spirit and limit the power of Nature, man has to cultivate vairagya (detachment). For instance, if one has a desire for various drinks, he can bring desires under control by giving up the desire for some of them. Thereby willpower is developed and in due course, it becomes easier to give up other desires. In vedantic parlance, this is described as vairagya. Vairagya is not an abandonment of hearth and home, and retiring to a forest. It means developing godly thoughts and reducing worldly feelings. It is when this balanced development takes place that one acquires Prakruti-Shakti (control over the power of Nature). When one gets such powers, one’s mental power increases. (Divine Discourse, Oct 04, 1992)
Be like the lotus, which though born in the slush at the bottom of the lake, by sheer willpower rises above the waters to see the Sun and be inspired by its rays. - Baba
ஆன்மிக சக்தி மேலோங்கும்போது இயற்கையின் சக்தி கட்டுக்குள் வைக்கப்படுகிறது. ஆன்மிக சக்தி பலவீனமாக இருக்கும்போது, இயற்கையின் சக்தி மேலோங்குகிறது. புகை மற்றும் நெருப்பின் உதாரணத்தைக் கொண்டு இதை விளக்கலாம். புகை அதிகமாக இருக்கும்போது நெருப்பு மட்டுப்படுத்தப்படுகிறது. நெருப்பு கொழுந்துவிட்டு எரியும் போது புகை மறைந்துவிடுகிறது. எனவே, ஆன்மிக சக்தியை அதிகரிக்கவும், இயற்கையின் சக்தியைக் கட்டுப்படுத்தவும், மனிதன் பற்றின்மை எனும் வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒருவருக்கு பலவிதமான பானங்கள் மீது ஆசை இருந்தால், அவற்றில் சிலவற்றின் மீதான ஆசையை விட்டுவிடுவதன் மூலம் அவர் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதன்மூலம் மன உறுதி அபிவிருத்தி அடைந்து, காலப்போக்கில் மற்ற ஆசைகளை விட்டுவிடுவது எளிதாகிறது. வேதாந்தத்தில் இது வைராக்கியம் என்று விவரிக்கப்படுகிறது. வைராக்கியம் என்றால் வீடுவாசலைத் துறந்து காட்டிற்குச் செல்வது என்பதல்ல. தெய்வீக சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு, உலகியலான உணர்வுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இந்த சீரான வளர்ச்சி நிகழும்போதுதான் ஒருவர் இயற்கை சக்தியின் மீதான கட்டுப்பாட்டை, அதாவது பிரக்ருதி-சக்தியைப் பெறுகிறார். அத்தகைய சக்திகளைப் பெறும்போது ஒருவருடைய மனோபலம் அதிகரிக்கிறது. (தெய்வீக அருளுரை, அக்டோபர் 04, 1992)
ஏரியின் அடியில் உள்ள சேற்றில் மலர்ந்திருந்தாலும், சூரியனைக் காண்பதற்கும், அதன் கதிர்களால் உத்வேகம் பெறுவதற்கும், தன் மனோபலத்தால் தண்ணீருக்கு மேலே எழும் தாமரையைப் போல இருங்கள். - பாபா