azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 10 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 10 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

What is the use of being born a human being if you do not foster human values such as Sathya, Dharma, Shanti, Prema and Ahimsa? For all the human values, Love is the basis. Today, human beings are human in form but not human in practice. In some places, one finds people exhibiting human values outwardly without practising them whole-heartedly. Human values are not meant for pradarshana (exhibition) but are meant for nidarshana (example). Human values should be reflected in all your thoughts, words, and deeds. But today, there is only selfishness and self-interest in whatever man thinks, speaks, and does. Due to selfishness and self-interest, human values are totally lost. A small example: here you find many bulbs glowing. It is not enough that you have only bulbs, you also need to have wires and current. When the current flows through the wires and enters the bulbs, they start glowing. Likewise, in order to experience the light of Love, the current of Truth has to pass through the wires of Righteousness and enter the bulb of Peace. (Divine Discourse, Oct 01, 1998)
Just as valuable ornaments are hidden in an iron safe, within the human body lie the valuable jewels of human values. - Baba
சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை, அஹிம்சை போன்ற மனித விழுமியங்களை நீங்கள் பேணவில்லை என்றால், ஒரு மனிதனாகப் பிறந்து என்ன பயன்? அனைத்து மனித விழுமியங்களுக்கும் ப்ரேமையே அடிப்படை. இன்று மனிதர்கள் உருவத்தில் மனிதர்களாக இருக்கிறார்கள், ஆனால் நடத்தையில் மனிதர்களாக இல்லை. சில இடங்களில், மனிதவிழுமியங்களை முழுமனதுடன் கடைப்பிடிக்காமல், அவற்றைக் கடைப்பிடிப்பதுபோல் போலியாகக் காட்டிக்கொள்ளும் நபர்களைக் காணலாம். மனிதவிழுமியங்கள் பிரதர்சனத்திற்கு, அதாவது கண்காட்சிக்காக அல்ல, ஆனால் நிதர்சனத்திற்காக, அதாவது நடைமுறையில் எடுத்துக்காட்டுவதற்காக. உங்கள் சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்கள் அனைத்திலும் மனிதவிழுமியங்கள் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் இன்று மனிதன் எதை நினைத்தாலும், பேசினாலும், செய்தாலும், அதில் சுயநலமும் சுயலாபமும் தான் உள்ளது. சுயநலம் மற்றும் சுயலாபத்தின் காரணமாக, மனிதவிழுமியங்கள் முற்றிலுமாக மறைந்துவிட்டன. ஒரு சிறிய உதாரணம்: இங்கே பல பல்புகள் ஒளிர்வதைக் காண்கிறீர்கள். பல்புகள் மட்டும் இருந்தால் போதாது, அவற்றிற்கு மின்கம்பிகளும், மின்சாரமும் தேவை. மின்சாரம், மின்கம்பிகள் வழியாக பல்புகளுக்குள் பாயும்போது, அவை ஒளிர ஆரம்பிக்கின்றன. அதேபோல், ப்ரேமஜோதியைப் பெறுவதற்கு, சத்தியம் எனும் மின்சாரம், தர்மம் எனும் மின்கம்பிகளின் வழியாக சாந்தி எனும் பல்புக்குள் நுழைய வேண்டும். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 01, 1998)
மதிப்புமிக்க ஆபரணங்களை இரும்புப் பெட்டகத்தில் பத்திரப்படுத்தி வைத்திருப்பதைப் போல, மனித உடலுக்குள் மனித விழுமியங்கள் எனும் மதிப்புமிக்க ஆபரணங்கள் உள்ளன. - பாபா