azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 09 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 09 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
It is unfortunate that man, who is inherently Divine in his origin and in whom the Atma resides as the indwelling witness, is caught up today in unrighteous and evil actions and is bringing discredit to the human species. In the dark ages, when men indulged in wicked and cruel actions and behaved like demons or wild beasts, there might be some excuse. But in the present age, when such great advances have been made in science and technology and when people call themselves civilised, if inhuman practices are predominant and wickedness and ingratitude are the rule, one is compelled to ask whether these persons are human beings or demons! The irony of the present situation is that, on the one side, governments are piling up monstrous lethal weapons, indulging in demonical actions and promoting conflicts among nations, while at international gatherings they proclaim their desire for peace. Is there any meaning in this? The foremost need today is for everyone to realise that God is One. This is what Jesus and Mohammed proclaimed. The word "Allah" really means the One Supreme which contains everything in the Universe. (Divine Discourse, Dec 25, 1984)
Where there is Divinity, there can be no enmity. Where there is no enmity, there you find supreme peace. - Baba
இயல்பிலேயே தெய்வீகமானவனும், தன்னுள் சாக்ஷிபூதமாக ஆத்மாவைக் கொண்டவனுமாகிய மனிதன், இன்று அதர்மமாக தீய செயல்களில் ஈடுபட்டு மனித இனத்துக்கே இழுக்கை ஏற்படுத்துவது துரதிருஷ்டவசமானது. நாகரீகம் வளர்ச்சி பெறாத இருண்ட காலத்தில், மனிதர்கள் பொல்லாத கொடூரமான செயல்களில் ஈடுபட்டு, அசுரர்கள் அல்லது காட்டு மிருகங்களைப் போல நடந்து கொண்டதற்கு, ஏதோ சில சமாதானங்களைச் சொல்லலாம். ஆனால், அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் அசாத்தியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு, மக்கள் தங்களை நாகரீகமானவர்கள் என்று கூறிக்கொள்ளும் இன்றைய காலகட்டத்தில், மனிதநேயமற்ற செய்கைகளும், அக்கிரமமும், நன்றியின்மையும் தலைவிரித்தாடுவதைப் பார்த்தால், இவர்கள் மனிதர்களா அல்லது அசுரர்களா என்று கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது! தற்போதைய சூழ்நிலையின் முரண்பாடு என்னவென்றால், ஒருபுறம் அரசாங்கங்கள் பயங்கரமான ஆயுதங்களைக் குவித்து, அசுரத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நாடுகளுக்கு இடையே மோதல்களை ஊக்குவித்துக்கொண்டே, மறுபுறம் சர்வதேச கூட்டங்களில் அவை அமைதியையும் சமாதானத்தையும் விரும்புவதாக பறைசாற்றிக் கொள்கின்றன. இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? ‘இறைவன் ஒருவனே’ என்பதை அனைவரும் உணர வேண்டியதுதான் இன்றைய தலையாய தேவையாகும். இதைத்தான் இயேசு கிருஸ்துவும், நபிகள் நாயகமும் போதித்தார்கள். “அல்லா” என்ற வார்த்தைக்கு உண்மையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள பரம்பொருள் என்று பொருளாகும். (தெய்வீக அருளுரை, டிசம்பர் 25, 1984)
தெய்வீகம் எங்குள்ளதோ அங்கு பகைமை இருக்க முடியாது. பகைமை எங்கில்லையோ, அங்கு ப்ரசாந்தி நிலைகொண்டிருப்பதைக் காண்பீர்கள். - பாபா