azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The capacity to concentrate is a very useful qualification. You must watch vagaries of your own mind —how it travels, what objects it runs after, and, slowly, by meditation, teach it to stay still and to behave beneficially. Don’t worry about the unsatisfactory environment you may have. Of course, the place may have some drawbacks and may not be ideal. But it’s no use trying to run away from all that. You can overcome the drawbacks by training your own mind. Stay in your environment and pray to the Lord that He may fill you with His thoughts and His vision, making you ignore the defects of the environment! Do not seek comfort, for comfort might not be conducive to meditation. Learn to be comfortable in any place; that is better. Live in joy wherever you are; that is the way. Revel in the realm of your mind; worship in the mind the Lord you have chosen as your goal and be free of all the defects of the natural or human environment! Then, no spot can be irksome to you, nor will any place seem disgusting. (Dhyana Vahini, Ch 14)
You should accept everything as God’s Will with an open mind. Consider everything as good. - Baba
ஏகாக்ரதை, அதாவது மனக்குவிப்பு என்பது மிகவும் பயனுள்ள திறனாகும். நீங்கள் உங்களது மனதின் சஞ்சலத் தன்மையை, அதாவது அது எங்கெல்லாம் செல்கிறது, எந்தப் பொருளின் பின்னால் அலைந்து திரிகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து, படிப்படியாக தியானத்தின் மூலம், ஓரிடத்தில் நிலை கொண்டிருக்கவும், பயனுள்ள வகையில் நடந்துகொள்ளவும் அதற்குக் கற்பியுங்கள். உங்களுடைய சூழ்நிலை திருப்திகரமாக இல்லையென்றாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த இடத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம், மேலும் அந்த இடம் சிறப்பானதாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு முயற்சிப்பதால் எந்தப் பயனும் இல்லை. உங்களுடைய மனதிற்குப் பயிற்சியளிப்பதன் மூலம், நீங்கள் குறைபாடுகளை சமாளிக்க முடியும். நீங்கள் இருக்குமிடத்தில் இருந்துகொண்டு, இறைவனுடைய சிந்தனைகள், தரிசனம் ஆகிவற்றை அருள வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்; இது நீங்கள் இருக்கும் சூழ்நிலையின் குறைபாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கச் செய்யும். சௌக்கியங்களை நாடாதீர்கள்; சௌக்கியங்கள் தியானத்திற்கு உகந்ததாக இருக்காது. எந்த இடமாக இருந்தாலும் அனுசரித்து இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; அதுவே சிறந்ததாகும். நீங்கள் எங்கு இருந்தாலும் ஆனந்தமாக வாழுங்கள்; அதுவே சிறந்த வழி. உங்களுடைய மனம் எனும் பிரபஞ்சத்தில் திளைத்திருங்கள்; அந்த மனதில் உங்களுடைய குறிக்கோளாக நீங்கள் தேர்ந்தெடுத்த இறைவனை ஆராதித்து, இயற்கை மற்றும் மனித சூழ்நிலையின் அனைத்து குறைபாடுகளால் பாதிக்கப்படாமல் இருங்கள். பின்னர், எந்த இடமும் உங்களுக்கு எரிச்சலூட்டுவதாகவோ, அருவருப்பானதாகவோ இருக்காது. (தியான வாஹினி, அத்தியாயம் 14)
நீங்கள் எல்லாவற்றையும் இறைவனுடைய சங்கல்பம் என திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். எல்லாம் நன்மைக்கே என்று கருதுங்கள். - பாபா