azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Atma Jnana can be obtained only by faith. Develop faith in yourself and faith in God. Today self-confidence is manifest only in matters relating to worldly achievements and self-centered pursuits. Faith and confidence are not in evidence in the spiritual field. Without unwavering faith, the Divine cannot be experienced. Because of the absence of firm faith, the formal observance of spiritual practices yields no results. The primary requisite is unqualified and unshakable faith in God. One-pointed devotion promotes spiritual earnestness. The earnest seeker gets knowledge of the Self. The earnest devotee needs no other qualification except deep faith. He needs no other knowledge, no title to lineage or wealth. He may belong to any caste or community. He may be a child or even an animal like Gajendra. Valmiki, Nanda, Kuchela, Dhruva, Gajendra, Sabari, Vidura and Hanuman are examples of devotees who got God's grace through their deep devotion, without any other special qualification. (Divine Discourse, Oct 06, 1986)
Pour the egoistic desires and emotions, passions, impulses and acts into the flames of dedication and devotion. - Baba
ஆத்மஞானத்தை நம்பிக்கையால் மட்டுமே பெற முடியும். தன்னம்பிக்கையையும், இறைநம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். இன்று தன்னம்பிக்கை என்பது உலகியலான சாதனைகள் மற்றும் சுயநல நோக்கங்கள் தொடர்பான விஷயங்களில் மட்டுமே காணப்படுகிறது; இறைபக்தியும், நம்பிக்கையும் ஆன்மிகத்துறையில் காணப்படவில்லை. அசைக்கமுடியாத நம்பிக்கை இன்றி ஆண்டவனை அனுபவிக்க முடியாது. உறுதியான நம்பிக்கை இல்லாததால், ஆன்மிக சாதனைகளை முறையாகக் கடைப்பிடிப்பது எந்த பலனையும் தருவதில்லை. இறைவன் மீது நிபந்தனையற்ற அசைக்க முடியாத நம்பிக்கையே முதன்மையான தேவையாகும். ஒருமுனைப்பான பக்தி ஆன்மிக சிரத்தையை மேம்படுத்துகிறது. சிரத்தையுள்ள ஆன்மிக சாதகர் ஆத்மஞானத்தைப் பெறுகிறார். தீவிர பக்தனுக்கு ஆழ்ந்த நம்பிக்கையைத் தவிர வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை. அவருக்கு வேறு எந்த அறிவோ, குலமோ, மதமோ, செல்வமோ தேவையில்லை. அவர் எந்த சாதி அல்லது சமூகத்தை சார்ந்தவராகவும் இருக்கலாம். குழந்தையாக இருக்கலாம் அல்லது கஜேந்திரனைப் போன்ற விலங்காகவும் இருக்கலாம். வால்மீகி, நந்தகோபன், குசேலன், துருவன், கஜேந்திரன், சபரி, விதுரன், அனுமன் ஆகியோர் வேறு எந்த சிறப்புத் தகுதியும் இல்லாமல், தங்கள் ஆழ்ந்த பக்தியினால் மட்டுமே இறைவனின் அருளைப் பெற்ற பக்தர்களுக்கு உதாரணங்கள் ஆவர். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 06, 1986)
அகங்கார ஆசைகள் மற்றும் உணர்ச்சிகள், உணர்வுகள், உந்துதல்கள் மற்றும் செயல்களை, அர்ப்பணிப்பு மற்றும் பக்தி எனும் வேள்வித்தீயில் ஆகுதியாக்கிவிடுங்கள். - பாபா