azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Each one of you must make your own heart a Prasanthi Nilayam. The transformation must begin from this very moment. Analyse your words, deeds, and thoughts and get rid of evil ones that harm you and others; instead cultivate sahana (fortitude), shanti (firm peace), satya (truth), etc. Now, the mind flutters about and squats on all and sundry objects in the Universe. It refuses to stay only on one idea - God. Like the fly that sits on fair and foul, but denies itself the pleasure of sitting on a hot cinder, the mind too flees from all thoughts of God. The fly will be destroyed if it sits on fire; the mind too is destroyed, when it dwells on God, for, the mind is but a pattern of desire woven with warp and woof of the same material! Desire ceases when God seizes the mind. In fact, since desire is the very stuff of which the mind is made, the mind becomes nonexistent when God completely occupies the mind, then you become free. (Divine Discourse, Sep 26, 1965)
Transform your thoughts, words and deeds and make your own heart a Prashanthi Nilayam. - Baba
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய இதயங்களையே பிரசாந்தி நிலையமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த நல்மாற்றம், இந்தத் தருணத்திலிருந்தே தொடங்க வேண்டும். உங்களது சொற்கள், செயல்கள் மற்றும் சிந்தனைகளை ஆராய்ந்து, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் கொடியவற்றை விட்டொழியுங்கள். சகிப்புத்தன்மை, நிலையான மன அமைதி, உண்மை பேசுவது, அதாவது சஹனம், சாந்தி, சத்தியம் முதலியவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். தற்போது, உங்கள் மனம் சிறகடித்துப் பறந்து சென்று, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் அமர்ந்து கொள்கிறது. அது, இறைவன் எனும் ஒற்றைச் சிந்தனையின் மீது நிலைகொள்ள மறுக்கிறது. ஒரு ஈ நல்லவை கெட்டவை என எல்லாவற்றின் மீது அமர்ந்தாலும், எரியும் தணலில் அமர மறுப்பதைப் போல, உங்கள் மனமும் அனைத்து இறைச் சிந்தனைகளிலிருந்தும் பறந்தோடி விடுகிறது. அந்த ஈ தணலில் அமர்ந்தால் அழிந்துவிடும்; அதைப்போல உங்கள் மனமும் இறைவன் மீது நிலைகொண்டுவிட்டால் அழிக்கப்பட்டுவிடும்; ஏனெனில், மனம் என்பது ஆசையெனும் இழைகளால் பின்னப்பட்ட வலையே அன்றி வேறில்லை! மனதை ஆண்டவன் ஆட்கொண்டவுடன் ஆசைகள் அறுபட்டு விடுகின்றன. உண்மையில், மனம் என்பது ஆசைகளால் உருவானதால், மனதில் முழுமையாக இறைவன் குடிகொள்ளும்போது மனமே இல்லாமல் போய்விடுகிறது; அதற்குப்பின் உங்களுக்கு விடுதலை தான்! (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 26, 1965)
உங்களுடைய சிந்தனைகள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றை நல்மாற்றம் செய்து, உங்களுடைய இதயத்தையே ஒரு பிரசாந்தி நிலையமாக ஆக்கிவிடுங்கள். - பாபா