azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The six demons - kama (lust), krodha (anger), lobha (greed), moha (attachment), madha (pride) and matsarya (hate) - pursue you and turn you into wrong paths and make you servile, stupid and sad. Fight against them resolutely. That is the life-long war you have to wage. It is not a seven-year war or a thirty-year War; it may be a hundred-year war, if you live a hundred years. The struggle knows no respite! This is a civil war, where vigilance alone can bring dividends. Arjuna prayed to Krishna, "The mind is infested by these demons; it does not afford me a moment of rest." Krishna said, "Give it to me!" Easy, is it not? Like the bee which hums until it reaches a flower and starts drinking the nectar, the mind too will clamour, until it settles on the Lotus Feet of the Lord, and then, it is silent, for it is engaged in tasting Divine Nectar! Once it discovers the nectar, it will not flutter anymore. (Divine Discourse, Oct 21, 1969)
You will not have any troubles if you offer your mind to God. - Baba
ஆறு அசுரர்களான காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் ஆகியவை உங்களைப் பின்தொடர்ந்து வந்து, உங்களைத் தவறான பாதையில் திருப்பி, உங்களை அடிமைகளாக, அறிவற்றவர்களாக, வருத்தப்படுபவர்களாக ஆக்கிவிடுகின்றன. அவற்றிற்கு எதிராக உறுதியுடன் போராடுங்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் நடத்த வேண்டிய யுத்தம் அது. இது ஏழு வருட யுத்தமோ முப்பது வருட யுத்தமோ அல்ல; நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் அதுவும் நூறு வருட யுத்தமாக இருக்கலாம். இந்தப் போராட்டத்திற்கு ஓய்வே கிடையாது! இது அகத்தில் நிகழும் யுத்தமாதலால் விழிப்புடன் இருந்தால் மட்டுமே பலன் கிட்டும். அர்ஜுனன் கிருஷ்ணனை நோக்கி, "என் மனம் முழுவதும் அசுரர்கள் பரவியுள்ளனர்; இவர்களால் எனக்கு ஒரு கணம் கூட ஓய்வு கிடைப்பதில்லை" என்று வருந்தினான். கிருஷ்ணர், "அதை என்னிடம் கொடுத்து விடு!" என்றார். மிகவும் எளிதானது, இல்லையா? ஒரு மலரை அடைந்து அதன் தேனைப் பருகும் வரை ரீங்காரமிடும் தேனீயைப் போல, மனமும் இறைவனின் மலர்ப் பாதங்களில் தஞ்சம் புகும்வரை ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கும்; அதன்பின் அருளமுதத்தைச் சுவைப்பதில் ஈடுபட்டு அமைதியாகிவிடுகிறது! அமுதம் இருப்பதை அறிந்தவுடன், அது இனி படபடக்காது. (தெய்வீக அருளுரை, அக்டோபர் 21, 1969)
உங்கள் மனதை நீங்கள் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால் உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்காது. - பாபா