azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The Lord cares for the feeling that accompanies the gift, the attitude with which the offering is made; He is not moved by the quantity or the cost. Draupadi offered a tiny piece of leaf sticking to the side of the vessel in which she had cooked the meal, and the Lord was so fully fed that He said that He was freed from all hunger. Rukmini placed just a single basil leaf on the scale, but since she had saturated it with her devotion, it weighed as much as Krishna Himself. Kuchela took a little beaten rice, and the Lord ate it with relish and was highly pleased with the offering so full of devotion. A piece of paper that is white, tough, and clean is not as valuable as another piece of equal size that, though soiled and dirty, has upon it the imprint of the Reserve Bank, making it a hundred-rupee note. The imprint of devotion makes the beaten rice precious. Give the Lord the fruit - the love that grows on the tree of life. (Divine Discourse, Sep 02, 1963)
God is Bhavapriya not Bahyapriya. The world is interested in bahyam (outward show), but God is interested in your bhavam (feeling). - Baba
நாம் எத்தகைய மனோபாவத்துடன் காணிக்கையை செலுத்துகிறோம், எந்த உணர்வுடன் அர்ப்பணிக்கின்றோம் என்பதையே இறைவன் பொருட்படுத்துகிறான்; அதன் எண்ணிக்கையாலோ, விலைமதிப்பாலோ அவன் மனம் இளகுவதில்லை. திரௌபதி, தான் சமைத்த பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த மிகச்சிறிய கீரையை பகவானுக்கு அளித்தாள்; அவர் அதை உண்டு தன் வயிறு நிறைந்துவிட்டதாகவும், பசி அனைத்தும் தீர்ந்துவிட்டதாகவும் கூறினார். ருக்மிணி, தராசில் ஒரே ஒரு துளசிதளத்தை மட்டுமே வைத்தாள், ஆனால் அவள் அதை தன் பக்தியால் நிறைத்திருந்ததால் அது கிருஷ்ணரின் எடைக்கு எடை ஆகிவிட்டது. குசேலர் சிறிதளவு அவலையே பகவானுக்கு எடுத்துச் சென்றார்; அதை ருசித்து உண்ட பகவான், பக்தி நிறைந்த அந்த அர்ப்பணிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். கறைபடிந்து அழுக்காக இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் முத்திரை பதித்த நூறு ரூபாய் நோட்டின் மதிப்புக்கு அதே அளவுள்ள மற்றொரு வெண்மையான, தடித்த, சுத்தமான காகிதத் துண்டு ஈடாகாது. அதைப் போன்று, பக்தியின் முத்திரை கொண்ட அவல் விலைமதிப்பற்றதாகி விடுகிறது. ஆகவே வாழ்க்கை எனும் மரத்தில் விளைந்த ப்ரேமை எனும் கனியை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யுங்கள். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 02, 1963)
இறைவன் பாவப்ரியன், பாஹ்யப்ரியன் அல்ல. உலகம் பாஹ்யத்தை, அதாவது வெளிப்புறப் பகட்டையே பொருட்படுத்துகிறது, ஆனால் இறைவன் உங்கள் மனோபாவத்தையே பொருட்படுத்துகிறான். - பாபா