azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 11 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 11 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Life has to be spent in accumulating virtue and safeguarding virtue, not riches. Listen and ruminate over the stories of the great moral heroes of the past, so that their ideals may be imprinted on your hearts. Virtue is becoming rare nowadays in the individual and in the family, society and community, in all fields of life, be it economic, or political or even 'spiritual’. So also, there is a decline in discipline, which is the soil on which virtue grows. Unless each one is respected, whatever his status, economic condition, or his spiritual development, there can be no peace and no happiness in life. This respect can be aroused only by the conviction that the same Atma that’s in you is playing the role of the other person. See that Atma in others; feel that they too have hunger, thirst, yearning and desires as you have; develop sympathy and the anxiety to serve and be useful. (Divine Discourse, Feb 22, 1968)
You must make your kayam (body), kalam (time) and kanksha (wishes) instruments for uplift, not downfall. - BABA
நற்பண்புகளை சேர்த்துக் கொள்ளவும் அவற்றைக் காத்துக்கொள்ளவும் தான் வாழ்க்கையே தவிர, செல்வத்தைக் குவிப்பதற்கல்ல. கடந்த காலத்தின் சிறந்த நல்லொழுக்க சீலர்களின் கதைகளைக் கேட்டு அவற்றைப் பற்றி சிந்தியுங்கள்; இதனால் அவர்களின் இலட்சியங்கள் உங்கள் இதயங்களில் பதியக் கூடும். தனிமனிதன் மற்றும் குடும்பம், சமூகம் மற்றும் சமுதாயம், பொருளாதாரம், அரசியல் மற்றும் ஆன்மிகத்தையும் சேர்த்து வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நற்பண்புகள் இன்று அரிதாகி வருகின்றன. அதைப்போலவே, நற்பண்புகளின் விளைநிலமாக விளங்கக்கூடிய கட்டுப்பாடும் குறைந்து வருகிறது. ஒருவருடைய அந்தஸ்து, பொருளாதார நிலை அல்லது ஆன்மிக முன்னேற்றம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொருவரும் மதிக்கப்படாவிட்டால், வாழ்க்கையில் சாந்தியும் சந்தோஷமும் இருப்பது அரிது. உங்களில் இருக்கும் அதே ஆத்மாதான் அடுத்த நபராக பாத்திரமேற்று நடிக்கிறது என்ற திடநம்பிக்கையால் மட்டுமே இந்த மரியாதையை நம்முள் எழச்செய்ய முடியும். அந்த ஆத்மாவை மற்றவர்களிடம் காணுங்கள்; உங்களைப் போலவே அவர்களுக்கும் பசி, தாகம், ஏக்கம் மற்றும் ஆசைகள் இருப்பதை உணருங்கள்; பிறருக்கு சேவை செய்பவனாகவும், பயனுள்ளவனாகவும் இருக்க வேண்டுமென்ற தாபத்தையும், இரக்க குணத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 22, 1968)
உங்களுடைய காயம், காலம், காங்க்ஷா, அதாவது உடல், நேரம், விருப்பங்கள் ஆகியவற்றை உயர்வதற்கான கருவிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும், தாழ்வதற்காக அல்ல. - பாபா