azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Ananya Bhakti refers to that kind of devotion which is based on the conviction that there’s nothing in the universe other than God and that everything in creation is a manifestation of God. God is immanent in the subtlest particle in the universe. The devotee sees God in everything and experiences God in every action. Nothing exists for him apart from the Divine. Wherever he goes, it is a pilgrimage. Every action is dedicated to the Divine. Such devotees attained God-realisation by this type of one-pointed devotion. This form of devotion can’t be practised easily by all. It is easy to say that God is all-pervasive. But it is not so easy to experience that truth. A true devotee is one who acts on the convictions he professes. This is what is implied in the concept of Trikarana shuddhi (purity in thought, word and deed). The Ananya Bhakta is one who continually acts on the basis of his belief that the Lord is omnipresent, omniscient and omnipotent. (Divine Discourse, Sep 12, 1989)
God offers Himself to His devotees in exactly the same manner in which devotees offer themselves to Him. - Baba
அனன்ய பக்தி என்பது பிரபஞ்சத்தில் இறைவனைத் தவிர மற்றொன்றில்லை மற்றும் படைப்பில் உள்ள ஒவ்வொன்றும் தெய்வத்தின் ஸ்வரூபம் என்ற திடநம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த பக்தியைக் குறிக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள மிக நுட்பமான அணுவிலும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான். பக்தன் எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறான், ஒவ்வொரு செயலிலும் இறைவனை உணர்கிறான். இறைவனைத் தவிர வேறெதுவும் இருப்பதாக அவன் கருதுவதில்லை. அவன் எங்கு சென்றாலும் அது தீர்த்த யாத்திரையே. ஒவ்வொரு செயலும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதே. இத்தகைய பக்தர்கள் ஏகாத்ம பக்தியின் மூலம் பரமாத்மாவை அடைந்தனர். இப்படிப்பட்ட பக்தியை எல்லோராலும் எளிதில் கடைப்பிடிக்க முடியாது. இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று சொல்வது எளிது. ஆனால் அந்த உண்மையை உணர்வது அவ்வளவு எளிதல்ல. தான் சொல்வதற்கேற்ப நடந்துகொள்பவனே உண்மையான பக்தனாவான். இதுவே திரிகரண சுத்தி - அதாவது, சிந்தனை, சொல் மற்றும் செயலில் தூய்மை என்பதாகும். இத்தகைய திரிகரண சுத்தியுடன், இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன் என்று உணர்ந்து செயல்படுபவனே அனன்ய பக்தன் ஆவான். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 12, 1989)
எவ்வாறு பக்தர்கள் தங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கிறார்களோ, அவ்வாறே பகவானும் தம் பக்தர்களுக்குத் தம்மையே அர்ப்பணித்துக் கொள்கிறார். - பாபா