azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The educational system today makes an educated person selfish. It makes him a slave to the senses and as a consequence, he forgets his own divine nature. Educated men are not prepared to take up service to the suffering people. It is not only the educated who are to be blamed for this situation. The government, which has failed to encourage and enthuse the people, is also to be blamed for this. Students are not being taught to be self-reliant and self-supporting. Despite the possession of high degrees, the educated man is frantically after salaried jobs rather than seeking independent careers. The educated man fights for his rights, without regard to the duties to be discharged. The man who neglects his duties will lose his rights as well. Rights and duties are inseparably interrelated. Love is the connecting link between the two. The faithful ones in the spiritual realm crave for joy, peace and comfort without striving to realise how they can be obtained. (Divine Discourse, Nov 22, 1984)
The education that nature around us gives us is much more than that given by a guru or a mother or a father. - Baba
இன்றைய கல்விமுறை மெத்தப் படித்தவனை சுயநலவாதியாக ஆக்குகிறது. அவனை புலன்களுக்கு அடிமையாக்குகிறது, அதன் விளைவாக அவன் தன் தெய்வீக இயல்பை மறந்துவிடுகிறான். துன்பப்படும் மக்களுக்குச் சேவை செய்ய படித்தவர்கள் தயாராக இல்லை. இந்த நிலைமைக்குப் படித்தவர்களை மட்டும் குறை கூறுவதற்கில்லை. மக்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கத் தவறிய அரசாங்கமும் இதற்கு பொறுப்பாகும். தற்சார்புடன் சொந்தக்காலில் நிற்பதற்கு மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. உயர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், படித்த மனிதன் சுயமாகத் தொழில் செய்வதைவிட சம்பளம் பெறும் வேலைகளையே தேடி அலைகிறான். அவன் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பொருட்படுத்தாமல் தன் உரிமைகளுக்காகப் போராடுகிறான். தன் கடமைகளைப் புறக்கணிக்கும் ஒருவன் தன்னுடைய உரிமைகளையும் இழக்க வேண்டி வரும். உரிமைகளும் கடமைகளும் இணைபிரியாது பின்னிப்பிணைந்தவை. ப்ரேமையே இரண்டிற்கும் இடையே உள்ள இணைப்பாகும். ஆன்மிகத் துறையில் நம்பிக்கை கொண்டவர்கள், சாந்தி, சுகம், ஆனந்தத்திற்காக ஏங்குகிறார்களே தவிர அவற்றை எவ்வாறு பெறுவது என்பதை அறிய முற்படுவதில்லை. (தெய்வீக அருளுரை, நவம்பர் 22, 1984)
நம்மைச் சுற்றியுள்ள இயற்கை நமக்கு போதிக்கும் கல்வி, தாய்-தந்தையர் அல்லது குரு போதிப்பதைக் காட்டிலும் மிக மிக அதிகம். - பாபா