azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 31 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 31 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Man often imagines that he has accomplished many things. Presuming that all that he achieves is entirely due to his own efforts and abilities, he deludes himself. He forgets the truth that there is a higher power which is the driving force for action as well as the author of the results thereof. This is the primary nature of bhrama (delusion). To get rid of this delusion and enable man to comprehend his inherent divine nature, the ancient sages taught a prayer. This prayer is addressed to Vinayaka. Suklambaradharam means ‘one who is clad in white’, Vishnum means ‘He is all-pervading’, Sasivarnam means ‘His complexion is grey like that of ash’, Chathurbhujam means ‘He has four arms’, Prasannavadanam means ‘He has always a pleasing mien’, Sarvavighnopasantaye means ‘for the removal of all obstacles’, and Dhyayeth means ‘meditate (on Him)’. Vinayaka is the deity who removes all bad qualities, instills good qualities and confers peace on the devotee who meditates on Him. (Divine Discourse, Sep 12, 1991)
The journey of life is made smoother and happier by the grace of Ganesha. - Baba
தான் பலவற்றைச் சாதித்துவிட்டதாக மனிதன் அடிக்கடி கற்பனையில் மிதக்கிறான். தான் பெறும் வெற்றிகள் அனைத்தும் முழுவதுமாக தன் சொந்த முயற்சியாலும் திறமையாலும் தான் என்று கருதி, தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான். செயலுக்கான உந்து சக்தியாகவும், அதன் பலன்களுக்கான கர்த்தாவாகவும் ஓர் பேராற்றல் இருக்கிறது என்ற சத்தியத்தை அவன் மறந்துவிடுகிறான். இதுவே பிரமை, அதாவது மாயையின் முதன்மையான இயல்பாகும். இந்த மாயையிலிருந்து விடுபட்டு, மனிதன் தனது உள்ளார்ந்த தெய்வீக இயல்பை அறிந்து கொள்வதற்கு, பண்டைய முனிவர்கள் ஒரு பிரார்த்தனையை போதித்தனர். இந்தப் பிரார்த்தனை விநாயகரை நோக்கி செய்யப்படுவதாகும். ‘சுக்லாம்பரதரம்’ என்றால் வெண்ணிற ஆடை தரித்தவர், ‘விஷ்ணும்’ என்றால் எங்கும் நிறைந்தவர், ‘சசிவர்ணம்’ என்றால் சாம்பல் நிறத்தவர், ‘சதுர்புஜம்’ என்றால் நான்கு கரங்கள் உடையவர், ‘ப்ரசன்னவதனம்’ என்றால் எப்போதும் இன்முகம் கொண்டவர், ‘ஸர்வவிக்னோபஸாந்தயே’ என்றால் அனைத்து தடைகளும் நீங்குவதற்கு, ‘த்யாயேத்’ என்றால் அவரைத் தியானியுங்கள் என்று பொருள். தன்னை தியானிக்கும் பக்தனுக்கு எல்லா கெட்ட குணங்களையும் நீக்கி, நல்ல குணங்களைக் கொடுத்து, அமைதியை நல்கும் தெய்வம் விநாயகராவார். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 12, 1991)
கணேசருடைய அருளால் வாழ்க்கைப் பயணம் சீரானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் ஆக்கப்படுகிறது. - பாபா