azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The aspirant should establish mastery over the external senses. Then, the mind, immersed in the continuous succession of subject-object (vishaya) relationship, has to be controlled by means of peace (shanti) and renunciation (vairagya). When that is done, one can experience real spiritual bliss (ananda) and visualise the Atma, in its real form. That is why Krishna once told Arjuna, “Those who aspire to have mastery over the senses must have full faith in Me.” The senses are always extroverted in nature; they are greedy for external contacts. Therefore, they drag the ignorant perpetually toward external objects. So the spiritual aspirant, endowed with discrimination and renunciation, must place obstacles in their outward path and suppress their outbursts, just like what the charioteer, wielding the whip and the reins, does to the raging steeds. Uncontrolled senses cause great harm. People in their grip cannot engage themselves in meditation, even for a single second! (Dhyana Vahini, Ch 13)
The senses are wayward by nature, and it is difficult to control them. One should, however, do one’s best to control them and put them to right use. - Baba
ஆன்மிக சாதகர் புலன்களின் மீதான கட்டுப்பாட்டை நிலைநாட்ட வேண்டும். பின்னர் புலன் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து மூழ்கியிருக்கும் மனதை, சாந்தி மற்றும் பற்றின்மையால் கட்டுப்படுத்த வேண்டும். அதைச் செய்துவிட்டால், ஒருவர் உண்மையான ஆனந்தத்தை அனுபவிப்பதோடு, ஆத்ம ஸ்வரூபத்தையும் காண முடியும். அதற்காகத்தான் ஒருமுறை அர்ஜுனனிடம் கிருஷ்ணர் இவ்வாறு சொன்னார்: "அர்ஜுனா, புலன்களைக் கட்டுப்படுத்த விழைவோர் என்னிடம் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்" என்றார். புலன்கள் எப்போதும் புறமுகமாகத் திரும்பக்கூடியவை; புறத்தொடர்புகளில் நாட்டம் கொண்டவை. எனவே அவை அஞ்ஞானியை புறப்பொருட்களின்பால் இடையறாது இழுத்துச் செல்லும். சாட்டையையும் கடிவாளத்தையும் கொண்டு சீறிப்பாயும் குதிரைகளை கட்டுக்குள் வைக்கும் தேரோட்டியைப் போல, விவேகம் மற்றும் பற்றின்மை உடைய ஒரு ஆன்மிக சாதகர், புலன்களின் புறத்தை நோக்கிய பாதையில் தடைகளை ஏற்படுத்தி, அவற்றின் சீற்றங்களை அடக்க வேண்டும். கட்டுப்பாடற்ற புலன்கள் பெரும் நாசத்தை ஏற்படுத்தும். அவற்றின் பிடியில் சிக்கியுள்ள மனிதர்களால் ஒரு நொடி கூட தியானத்தில் ஈடுபட முடியாது. (தியான வாஹினி, அத்தியாயம்-13)
புலன்கள் சஞ்சலத் தன்மை கொண்டவை, மேலும் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமே. இருப்பினும் ஒருவர் தன்னால் இயன்றவரை அவற்றைக் கட்டுப்படுத்தி, நல்வழியில் பயன்படுத்த வேண்டும். - பாபா