azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 25 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 25 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Look upon joy and grief as teachers of courage and balance. Grief is a friendly reminder, a good taskmaster, and even a better teacher than joy. The Lord grants both protection and punishment; for, how can He be the Lord, if He does not insist on strict accounting and strict obedience? You are as distant from the Lord as you think you are, as near Him as you feel you are. Well, let Me tell you this. The distance from Me to you is the same as the distance from you to Me, is it not? But, you complain that I am far, far from you, though you are approaching nearer and nearer. How can that be? I am as near you as you are near Me! That nearness is won by devotion, which cannot be steady except after getting rid of "I" and "Mine". (Divine Discourse, Feb 20, 1964)
Forgetting the God who is nearest and closest to them, people are trying to seek an invisible God elsewhere. - BABA
சுகத்தையும் துக்கத்தையும், தைரியம் மற்றும் சமநிலையைப் போதிக்கும் ஆசான்களாகக் கருதுங்கள். துக்கம் என்பது ஒரு நட்பான நினைவூட்டல், ஒரு நல்ல பணி ஏவுநர், தவிர, சுகத்தையும் விட சிறந்த ஆசான் ஆகும். ரட்சிப்பவனும் தண்டிப்பவனும் இறைவனே; ஏனெனில் சரியான கணக்கு வழக்கு மற்றும் கண்டிப்பான அடி பணிதல் ஆகியவற்றில் கறாராக இல்லை என்றால் அவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? நீங்கள் இறைவனிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருப்பதாக எண்ணுகிறீர்களோ, அவ்வளவு தொலைவில் இருக்கிறீர்கள்; எவ்வளவு அருகில் இருப்பதாக உணர்கிறீர்களா, அவ்வளவு அருகில் இருக்கிறீர்கள். நல்லது! இப்போது நான் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். என்னிடமிருந்து நீங்கள் இருக்கும் தூரமும், உங்களிடமிருந்து நான் இருக்கும் தூரமும் ஒன்றுதான், அல்லவா? ஆனால், நீங்கள் என்னை மேன்மேலும் நெருங்கி வந்து கொண்டிருந்தாலும் கூட, நான் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன் என்று நீங்கள் முறையிடுகிறீர்கள். அது சரியாகுமா? நீங்கள் எனக்கு எவ்வளவு அருகில் இருக்கிறீர்களோ, நான் உங்களுக்கு அவ்வளவு அருகில் இருக்கிறேன். அத்தகைய நெருக்கத்தை பக்தியினாலேயே பெற முடியும்; அந்த பக்தி, "நான்", "எனது" என்ற உணர்வுகளை விடாதவரை நிலையானதாக இருக்க முடியாது. (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 20, 1964)
தங்களுக்கு மிக அருகிலும், மிக நெருக்கமாகவும் இருக்கும் இறைவனை மறந்துவிட்டு, மனிதர்கள் கண்ணுக்குப் புலப்படாத கடவுளை வேறு எங்கோ தேட முற்படுகின்றனர். - பாபா