azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
True love is an expression of Divinity. Like the mariner's compass, it always points to the Divine wherever it may be present. As oil makes a lamp burn, love illumines life itself. What is termed love in ordinary worldly life is not real love at all. It is only some form of attachment based on human relationships in family or society. True love is pure, selfless, free from pride, and is full of bliss. Such love can be got only through love. All worldly attachments are not real love; they are transient. Everlasting, pure love arises from the heart. In fact, it’s ever-existing and all-pervading. How is it that man is unable to recognise such all-pervading love? It is because man's heart today has become barren and polluted. The heart is filled with all kinds of desires and there is no room in it for pure, unsullied love to enter. It is only when worldly attachments are expelled from the heart that there will be room for real love to abide in it and grow. (Divine Discourse, Jul 27, 1996)
Love seeks no reward; Love is its own reward. - BABA
உண்மையான ப்ரேமை தெய்வீகத்தின் வெளிப்பாடாகும். மாலுமியின் திசைகாட்டியைப் போலவே, ப்ரேமை எங்கு இருந்தாலும் அது எப்போதும் தெய்வத்தையே சுட்டிக்காட்டுகிறது. தீபத்தை எண்ணெய் எரிய வைப்பது போல, ப்ரேமை வாழ்க்கையை ஒளிரச் செய்கிறது. சாதாரணமாக உலக வாழ்க்கையில் ப்ரேமை என்று சொல்லப்படுவது உண்மையான ப்ரேமையே அல்ல. இது குடும்பம் அல்லது சமூகத்தில் உள்ள மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவிதமான பற்றுதல் மட்டுமே. உண்மையான ப்ரேமை தூய்மையானது, தன்னலமற்றது, தற்பெருமை இல்லாதது மற்றும் பேரின்பம் நிறைந்தது. அத்தகைய ப்ரேமையை ப்ரேமையினால் மட்டுமே பெற முடியும். உலகப் பற்றுதல்கள் அனைத்தும் உண்மையான ப்ரேமை அல்ல; அவை நிலையற்றவை. நிரந்தரமான பரிசுத்தமான ப்ரேமை இதயத்திலிருந்தே எழுகிறது. உண்மையில், அது என்றும் நிலைத்திருக்கின்றது, எங்கும் பரவியிருக்கின்றது. இப்படி எங்கும் பரவியிருக்கும் ப்ரேமையை ஏன் மனிதனால் அடையாளம் காண முடியவில்லை? இன்று மனிதனின் இதயம் வறண்டும், மாசடைந்தும் இருப்பதே இதற்குக் காரணம். இதயம் எல்லாவிதமான ஆசைகளால் நிறைந்திருப்பதால், அதில் தூய்மையான, களங்கமற்ற ப்ரேமை புகுவதற்கு இடமேயில்லை. உலகப் பற்றுதல்கள் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் போதுதான் உண்மையான ப்ரேமை அதில் நிலைத்து வளர இடமிருக்கும். (தெய்வீக அருளுரை, ஜூலை 27, 1996)
ப்ரேமை எந்த வெகுமதியையும் நாடுவதில்லை; ப்ரேமையே ப்ரேமைக்கு வெகுமதியாகும். - பாபா