azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 18 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 18 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The Krishna principle revels in delight. The Rama principle is based on the concept of badhyatha (obligation). Ramayana is intended to promote the reign of Truth and Righteousness on earth. Krishna Avatar was intended to give a perennial message to the world. Krishna sought nothing for himself. He kept nothing for himself. He gave away everything to the people. He slew his maternal uncle, Kamsa, and installed on the throne Kamsa's father, Ugrasena. He did not covet the Kingdom. He befriended the Pandavas, defeated the Kauravas and crowned Dharmaja as the emperor. He did not make Himself king. He was a king without a crown. He was the King of Kings. He had no kingdom of His own. But He ruled over the hearts of millions. It is this profound truth that is proclaimed by the Krishna-tatwa (Krishna principle). If you enquire deeply, you will find that every Avatar incarnated to convey a special message and carry out a particular mission. (Divine Discourse, Sep 04, 1996)
Mere repetition of the name, Krishna, will be of no use unless the contemplation of His Glory starts purifying the character at the same time. - BABA
கிருஷ்ண தத்துவம் என்பது ஆனந்தமயமானது. ராம தத்துவம், பாத்யதையை அதாவது கடமையை அடிப்படையாகக் கொண்டது. ராமாயணம், இப்புவியில் சத்ய தர்மங்களை அரசாளச் செய்வதற்கான நோக்கம் கொண்டது. கிருஷ்ணாவதாரம், உலகிற்கு அருட்செய்தியை போதிப்பதற்கான நோக்கம் கொண்டது. கிருஷ்ணர் தனக்காக எதையும் ஆசைப்படவில்லை. தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளவுமில்லை. அனைத்தையும் மக்களுக்கே கொடுத்தார். அவர் தனது தாய் மாமன் கம்சனை வதம் செய்து, கம்சனின் தந்தை உக்ரசேனனை அரியணையில் அமர்த்தினார். ஆனால் தான் ராஜ்யத்தை அடைய வேண்டுமென விரும்பவில்லை. பாண்டவர்களுடன் நட்பு கொண்டு, கௌரவர்களை வென்று, தர்மராஜனை சக்ரவர்த்தியாக முடிசூட்டினார். அவர் முடிசூடா மன்னனாக இருந்தார். அரசர்களின் பேரரசராகத் திகழ்ந்தார். அவருக்கென்று ராஜ்யம் எதுவுமில்லை. ஆனால் கோடிக்கணக்கானோரின் இதயங்களில் ஆட்சி புரிந்தார். கிருஷ்ண தத்துவம் போதித்த ஆழ்ந்த சத்தியம் இதுவே. நீங்கள் தீவிரமாக ஆராய்ந்தால், ஒவ்வொரு அவதாரமும் உயர்ந்த இலட்சியத்தை போதிப்பதற்கும், குறிப்பிட்ட அவதாரப் பணியை நிறைவேற்றுவதற்கும் தோன்றியவையே என்பதை அறியலாம். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 04, 1996)
கிருஷ்ணரின் மகிமையை ஆழ்ந்து சிந்திக்கும் அதே நேரத்தில் நம் குணநலனும் செம்மையுறவில்லை என்றால் அவரின் நாமத்தை வெறுமனே உச்சரிப்பதால் எந்தப் பயனும் இல்லை. - பாபா