azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

When Lakshmana fainted on the battlefield, Rama lamented, "If I were to search in the world, I may get another wife like Sita, a mother like Kausalya, but not a brother like Lakshmana." In this manner, Rama was deeply touched by the fraternal love of Lakshmana and extolled his qualities. There are many families in the world where parents, brothers and sisters have demonstrated great ideals. You don't need to doubt whether such ideal brothers exist even today. They do exist. There may be temporary differences of opinion, but they always love each other. Every man must necessarily make efforts to realise the principle of Atma, which is present in all. The sweetness of the Atmic experience is unparalleled. In the spiritual field, what one has to attain is the experience of Atmic bliss. He, who realises the inherent Divinity in humanity, is a true human being. The Atma has no specific form. It is full of love and bliss. This has to be realised and experienced by every individual. (Divine Discourse, Oct 17, 2003)
Expand your heart, taking in all humanity into the circle of your kin, even the birds, beasts, worms, insects, trees and plants. - Baba
லக்ஷ்மணன் போர்க்களத்தில் மயங்கி விழுந்தபோது, “நான் உலகில் தேடினால், சீதையைப் போன்று இன்னொரு மனைவியும், கௌசல்யாவைப் போன்று ஒரு தாயும் எனக்குக் கிடைக்கலாம், ஆனால் லட்சுமணனைப் போன்ற ஒரு சகோதரன் கிடைக்க மாட்டானே!” என்று இராமர் புலம்பினார். இவ்வாறு ராமர், லட்சுமணனின் சகோதர பாசத்தால் மனம் நெகிழ்ந்து, அவனுடைய குணங்களைப் போற்றிப் புகழ்ந்தார். உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்ந்து காட்டிய, பெற்றோர்கள், சகோதர சகோதரிகளைக் கொண்ட பல குடும்பங்கள் உலகில் உள்ளன. இப்படிப்பட்ட இலட்சிய சகோதரர்கள் இன்றும் இருக்கிறார்களா என்று நீங்கள் சந்தேகப்படத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்காலிகமாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர்கள் எப்போதும் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். அனைத்திலும் உள்ள ஆத்ம தத்துவத்தை உணர ஒவ்வொரு மனிதனும் அவசியம் முயற்சி செய்ய வேண்டும். ஆத்மானுபவத்தின் இனிமை ஈடுஇணையற்றது. ஆன்மிகத் துறையில் ஒருவர் அடைய வேண்டியது ஆத்மானந்தத்தின் அனுபவமே. மனிதகுலத்தின் உள்ளார்ந்த தெய்வீகத்தை உணர்பவனே உண்மையான மனிதனாவான். ஆத்மாவிற்கென்று ஒரு குறிப்பிட்ட ரூபம் கிடையாது. அது அன்பும் ஆனந்தமும் நிறைந்தது. இதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 17, 2003)
உங்கள் இதயத்தை விசாலமாக்கி, மனிதகுலம் முழுவதையும், அதனுடன் பறவைகள், மிருகங்கள், புழுக்கள், பூச்சிகள், மரங்கள், தாவரங்கள் ஆகியவற்றையும் உங்கள் உறவு வட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். - பாபா