azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

In Persian, ‘Islam’ means ‘surrender or peace’. The inner meaning of this term is that man should surrender to God and live in peace with his fellow men. The holy book of Islam, the Quran, contains many sacred precepts. Salat is one such precept. It enjoins one to worship God with steady faith. Another precept is Zakat, which urges the believer to practice charity for relieving fellow beings who are in need or distress. In the scriptures of the Bharatiyas too, a similar duty has been laid down in the saying: Paropakaraya Punyaya Papaya Para Peedanam (It is meritorious to help others and it is sinful to cause harm to others). But forgetting this fundamental truth, the followers of each faith raised barriers based on credal differences which were really verbal and not fundamental. Today various kinds of differences are arising among religions. This is not a good thing. Everyone should base their life on the divinely ordained morals and verities and endeavour to foster them. (Divine Discourse, Jul 23, 1989)
When one leads a life governed by moral values, they achieve the most precious things in life and also name, fame and prosperity. - BABA
பாரசீக மொழியில் ‘இஸ்லாம்’ என்றால் ‘சரணடைதல் அல்லது சாந்தி’ என்று பொருள். மனிதன் இறைவனிடம் சரணடைந்து சக மனிதர்களோடு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும். இஸ்லாமின் புனித நூலான குர்ஆன் பல புனிதக் கோட்பாடுகளைக் கொண்டது. அவற்றுள் ‘ஸலாத்’ ஒரு கோட்பாடாகும். உறுதியான நம்பிக்கையுடன் பக்தியுடன் இறைவனை வழிபட வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது. ‘ஜகாத்’ என்ற மற்றொரு கோட்பாடு, சக மனிதர்களுக்கும் ஏழை எளியோருக்கும் தான தர்மங்கள் செய்து உதவ வேண்டுமென இஸ்லாமைப் பின்பற்றுபவர்களை வலியுறுத்துகிறது. இதைப்போன்றே, பாரதீயர்களின் இதிஹாச புராணங்களிலும், ‘பரோபகாராய புண்யாய பாபாய பரபீடனம்’ என்ற வாக்கில், பிறருக்கு உதவுவதே புண்ணியம், பிறருக்குத் தீங்கிழைப்பதே பாவம் என்பதை கடமையாகக் கொள்ளவேண்டுமென கூறப்பட்டுள்ளது. இந்த ஆதார சத்தியத்தை மறந்து, ஒவ்வொரு மதத்தினரும், தத்தம் மத நம்பிக்கை மீதான வேற்றுமைகளின் அடிப்படையில் தடைகளை எழுப்பி விட்டார்கள். இவை உண்மையில் வெறும் வார்த்தைகளே தவிர அடிப்படையானவை அல்ல. இன்று மதங்களுக்கிடையில் பலவிதமான வேறுபாடுகள் உருவாகிக்கொண்டு வருகின்றன. இது நல்லதல்ல. தங்கள் வாழ்க்கையை இறைவன் வகுத்த ஒழுக்கநெறிகள் மற்றும் சத்தியங்களின் அடிப்படையில் அமைத்து, அவற்றைப் பேணி வளர்க்க ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். (தெய்வீக அருளுரை, ஜூலை 23, 1989)
ஒருவர் ஒழுக்க நெறிகளால் நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கையை நடத்தும்போது, வாழ்க்கையில் மிக விலைமதிப்பற்ற விஷயங்களோடு, பெயர், புகழ் மற்றும் செழிப்பையும் அடைகிறார். - பாபா