azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
God is like the divine wish-fulfilling tree, which gives whatever is asked. But you have to go near the tree and wish for the thing you want. The atheist is the person who keeps far away from the tree and the theist is the one who has come near; that’s the difference. The tree does not make any distinction; it grants boons to all. The Lord will not punish or take revenge if you do not recognise Him or revere Him. He has no special type of worship which alone can please Him. If you have the ear, you can hear “Om” announcing the Lord’s Presence in every sound. All five elements produce this sound, “Om”. The bell in the temple is intended to convey that “Om” is the symbol of the Omnipresent God. When the bell sounds “Om”, the Divinity within you will awaken, and you will be aware of His Presence. That’s the meaning of the bell that is rung in front of an inner shrine in the temple. Earn the right to approach the Lord without fear and the right to ask for your heritage. You must become so free that praise will not emanate from you when you approach the Lord. Praise is a sign of distance and fear. (Divine Discourse, Mar 25, 1958)
It is only when God is approached as a loving friend who has the power to come to our aid that our desires will be fulfilled. - BABA
இறைவன், எதைக்கேட்டாலும் அளிக்கும் தெய்வீக கற்பகத்தருவைப் போன்றவன். ஆனால், நீங்கள் மரத்தின் அருகில் சென்று உங்களுக்குத் தேவையானதைக் கேட்க வேண்டும். நாத்திகன் என்பவன் மரத்திலிருந்து விலகி வெகு தொலைவில் இருப்பவன், அருகில் வருபவனே ஆத்திகன்; அதுதான் வித்தியாசம். மரம் எந்த வித்தியாசத்தையும் பாராட்டுவதில்லை; அது அனைவருக்கும் வரங்களைக் கொடுக்கிறது. இறைவனை நீங்கள் அறியவில்லை, போற்றவில்லை என்பதற்காக அவன் தண்டிக்கவோ பழிதீர்க்கவோ மாட்டான். அவனை மகிழ்விப்பதற்கென்றே சிறப்பான ஆராதனை என்று எதுவும் இல்லை. நீங்கள் காது கொடுத்து கேட்டால், ஒவ்வொரு ஒலியிலும் இறைவனுடைய ஸாந்நித்யத்தை உரைக்கும் "ஓம்" என்பதை நீங்கள் கேட்க முடியும். பஞ்சபூதங்களும் “ஓம்” எனும் ஒலியை எழுப்புகின்றன. “ஓம்” என்பது எங்கும் நிறைந்துள்ள இறைவனின் சின்னம் என்பதை உணர்த்துவதற்காகவே கோவிலில் மணி உள்ளது. “ஓம்” என்று மணி ஒலிக்கும்போது, உங்களுக்குள் இருக்கும் தெய்வீகம் தட்டி எழுப்பப்பட்டு, இறைவனுடைய ஸாந்நித்யத்தை நீங்கள் உணர்வீர்கள். கோவிலில் உள்ள சன்னதியின் முன் அடிக்கப்படும் மணியின் அர்த்தம் இதுதான். அச்சமின்றி ஆண்டவனை அணுகும் உரிமையையும், உங்கள் பாரம்பரியத்தை அடையும் உரிமையையும் கேட்டுப் பெறுங்கள். நீங்கள் இறைவனை அணுகும்போது அவனைப் போற்றிப் புகழ்ந்தாக வேண்டும் என்று தோன்றாத அளவுக்கு நீங்கள் அவனிடம் சுதந்திரமாக உணர வேண்டும். போற்றிப் புகழ்தல் என்பது நெருக்கமின்மை மற்றும் அச்சத்தின் அடையாளமாகும். (தெய்வீக அருளுரை, மார்ச் 25, 1958)
நமக்கு உதவக்கூடிய ஆற்றல் பெற்ற அன்புத்தோழனாக இறைவனை அணுகினால் மட்டுமே நமது விருப்பங்கள் நிறைவேறும். - பாபா