azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
A lady wept that her necklace was lost or stolen; she searched everywhere and became inconsolably sad. Then, when she passed a mirror, she found the lost necklace around her neck. Thus, it was there all the time. Similarly, God is there, as the Inner Dweller, whether you know it or not. Love is of three kinds: a) self-centred, which like a bulb, illumines just a small room; b) mutual, which like the moonlight, spreads wider but is not clearer; and c) others-centred, which like the sunlight, is all pervasive and clear. Cultivate the third type of love; that will save you. All the service that you do to others through that love is in fact service done to yourself. It is not others that you help, it is yourself that is helped, remember.(Divine Discourse, Feb 27, 1961)
When the Love Principle is known and practised, man will be free from anxiety and fear. - BABA
ஒரு பெண்மணி தனது கழுத்துச் சங்கிலி தொலைந்துவிட்டது திருடப்பட்டுவிட்டது என்று கதறிக் கொண்டு இருந்தாள்; அவள் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு, ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்தாள். பின்னர் தற்செயலாக அவள் கண்ணாடியில் பார்க்க நேர்ந்தபோது, தொலைந்து போனதாகக் கருதிய அந்தச் சங்கிலி அவளுடைய கழுத்திலேயே இருப்பதைக் கண்டாள். அது எப்போதும் அங்கேயேதான் இருந்தது. அதைப்போலவே, நீங்கள் அறிந்தாலும் அறிந்திராவிட்டாலும், இறைவனும் உங்களுள்ளேயே உறைகின்றான். அன்பு மூன்று விதமானது: 1) சுயநலம் - ஒரு சிறிய அறைக்கு மட்டுமே வெளிச்சமளிக்கும் ஒரு பல்பைப் போன்றது, 2) பரஸ்பர நலம் - தெளிவற்ற பரந்த நிலவொளியைப் போன்றது, 3) பிறர் நலம் - எங்கும் வியாபித்திருக்கும் தெள்ளத் தெளிவான சூரிய ஒளியைப் போன்றது. நீங்கள் மூன்றாவது விதமான அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்; அது உங்களைக் காக்கும். அந்த அன்பின் மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு ஆற்றும் அனைத்து சேவையும், உண்மையில், நீங்களே உங்களுக்குச் செய்து கொள்ளும் சேவையாகும். நீங்கள் உதவுவது மற்றவர்களுக்கு அல்ல, உங்களுக்கே தான் நீங்கள் உதவிக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 27, 1961)
ப்ரேம தத்துவத்தை அறிந்து கடைப்பிடிக்கும்போது, மனிதன் கவலையும் அச்சமும் இன்றி இருப்பான். - பாபா