azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Cultivate four types of strength: of body, intellect, wisdom, and conduct. Then you become unshakable, and you are on the path of spiritual victory! Once a person came to Me and argued that there was no God and he was not prepared to believe in one. I replied, “Do you have faith in yourself at least? Which is your Self? Your Self is God. You have faith in your judgement, intelligence, and your ability because God within you, tells you not to fear or falter. That assurance from within, from your basic truth, is otherwise called God. It does not matter if you do not call it God; it is enough if you believe in Yourself! That is the real test of theism.” I say the same thing to you also. The body is the temple of God; God is installed in every body, whether the owner of the body recognises it or not. It is God that inspires you to do good acts, and that warns you against the bad. Listen to that Voice. Obey that Voice and you will not come to any harm. (Divine Discourse, Feb 27, 1961)
If you follow the Master, you can face the devil, fight to the end and finish the game. - BABA
உடல், புத்தி, ஞானம், நடத்தை ஆகிய நான்கு வகையான சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அசைக்க முடியாதவர்களாகி, ஆன்மிக வெற்றியின் பாதையில் செல்வீர்கள்! ஒருமுறை ஒருவர் என்னிடம் வந்து, இறைவன் இல்லை என்றும், அத்தகைய ஒருவனை நம்பத் தயாராக இல்லை என்றும் வாதிட்டார். நான் அவரிடம், “குறைந்தபட்சம் உன் மீதாவது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? உன் ஆத்மா எது? உன் ஆத்மாவே இறைவன். உன்னுடைய சீர்தூக்கிப் பார்க்கும் திறன், அறிவுத்திறன், திறமை ஆகியவற்றில் உனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஏனென்றால் உன்னுள் இருக்கும் இறைவன் உன்னை அச்சமுறவோ தடுமாறவோ வேண்டாம் என்று கூறுகிறான். உள்ளிருந்து, உன்னுடைய ஆதார சத்தியத்திலிருந்து வரும் அந்த வாக்குறுதியே இறைவன் என்று அழைக்கப்படுகிறது. அதை நீ இறைவன் என்று அழைக்காவிட்டாலும் பரவாயில்லை; உன்னை நீ நம்பினால் போதும்! அதுதான் ஆத்திகத்தின் உண்மையான சோதனை” என்று பதிலளித்தேன். அதையேதான் உங்களுக்கும் சொல்கிறேன். உடலே இறைவனின் ஆலயம்; ஒவ்வொரு உடலிலும் இறைவன் கொலுவீற்றிருக்கிறான். அதை உடலுக்குச் சொந்தமானவர் உணருகிறாரோ இல்லையோ, ஒவ்வொரு உடலிலும் இறைவனே கொலுவீற்றிருக்கிறான். நல்ல செயல்களைச் செய்ய உங்களைத் தூண்டுவதும், தீயவற்றிற்கு எதிராக உங்களை எச்சரிப்பதும் இறைவன் தான். அந்தக் குரலை கவனமாகக் கேளுங்கள். அந்தக் குரலுக்குக் கீழ்ப்படிந்தால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது. ( தெய்வீக அருளுரை, பிப்ரவரி 27, 1961)
நீங்கள் இறைவனைப் பின்பற்றினால், தீயவற்றை எதிர்கொண்டு, இறுதிவரை போராடி, போட்டியில் வெல்ல முடியும். - பாபா