azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Man today has forgotten his true Self and is getting carried away by illusion. What is the reason? A small example to illustrate this. Pure gold shines brilliantly and has a very high value. However, when it gets alloyed with metals like silver, copper, brass, etc., it loses not only its identity but also its value. Similarly, man, who can be compared to pure gold, has lost his true identity and also his value as his mind is polluted with worldly thoughts and unsacred feelings. Man today cannot be called a human being in the strict sense of the term. He has lost his humanness because of bad thoughts and bad company. What man needs to cultivate today is the value of the ever-brilliant and effulgent Self. Human values cannot be acquired from outside. They are innate and inborn. Man is gifted with love, but he has highly adulterated it with selfishness and self-interest. He should cultivate selfless love. Only then will his life shine brilliantly. (Divine Discourse, Mar 12, 1999)
Human life has no meaning without human values. To be a true human, practise these values in daily life. - BABA
மனிதன் இன்று தன் உண்மையான இயல்பை மறந்து, மாயையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான். காரணம் என்ன? இதை விளக்க ஒரு சிறிய உதாரணம். பத்தரை மாற்றுத் தங்கம் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதோடு, விலையுர்ந்ததாகவும் இருக்கிறது. இருப்பினும், அதனுடன் வெள்ளி, தாமிரம், பித்தளை போன்ற உலோகங்கள் கலக்கப்படும்போது, அது தன் அடையாளத்தை மட்டுமல்ல, தன்னுடைய மதிப்பையும் இழந்து விடுகிறது. அதேபோல, பத்தரை மாற்றுத் தங்கத்திற்கு ஒப்பான மனிதன், அவனுடைய மனம் உலக எண்ணங்களாலும் புனிதமற்ற உணர்வுகளாலும் மாசடைந்து விட்டதால், தன் உண்மையான அடையாளத்தை இழந்ததோடு, தன் மதிப்பையும் இழந்துவிட்டான். இன்று மனிதன் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்திற்கு உகந்தவன் என்று மனிதனை அழைக்க முடியாது. தீய எண்ணங்களாலும் தீய சேர்க்கையினாலும் அவன் தன்னுடைய மனிதத்தன்மையை இழந்துவிட்டான். மனிதன் இன்று வளர்த்துக்கொள்ள வேண்டியதெல்லாம் என்றும் பிரகாசிக்கும் ஆத்மஜோதியின் மதிப்பைத்தான். மனித விழுமியங்களை வெளியிலிருந்து பெற முடியாது. அவை உள்உறைபவை, உடன்பிறந்தவை. மனிதனுக்கு ப்ரேமை அருளப்பட்டுள்ளது, ஆனால் அவன் அதனுடன் சுயநலத்தையும் சுயலாபத்தையும் கலந்து களங்கப்படுத்திவிட்டான். அவன் தன்னலமற்ற ப்ரேமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவனுடைய வாழ்க்கை ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். (தெய்வீக அருளுரை, மார்ச் 12, 1999)
மனித விழுமியங்கள் இன்றி மனித வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. ஒரு உண்மையான மனிதனாக இருக்க, அன்றாட வாழ்க்கையில் இந்த விழுமியங்களைக் கடைப்பிடியுங்கள்.. - பாபா