azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 18 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 18 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The impure tendencies lead one to vices such as craving to see things that cater to lower desires (like cinema pictures); eating dishes that are full of passion (rajasic) like fish and flesh; drinking intoxicants that ruin one’s personality by developing anger, delusion, greed, conceit, deceit, hatred, envy, etc. Impure tendencies are of three types: a) Worldly impulses, b) scholarly or intellectual impulses, and c) physical or bodily impulses. The physical impulses make men desire a beautiful physique, strong and sturdy build, glossy skin that will never be disfigured by wrinkles, and round hard muscles. Scholarly impulses prompt one to crave being known as an unrivalled expert and to crave defeat of every competitor in the field. And lastly, worldly impulses make one crave glory, power, personal authority, and pomp. All desires can be grouped under these heads; they are all impulses. They bind you to the wheel of birth and death (samsara) and tie you down to this Earth. (Dhyana Vahni, Ch 11)
When we sow a thought, we reap an action. When we sow an action, we reap a tendency. When we sow a tendency, we reap our character. When we sow our character, we reap our destiny. - BABA
கீழ்த்தரமான ஆசைகளுக்குத் தீனி போடும் விஷயங்களைப் பார்ப்பது (சினிமா படங்கள் போன்றவை), ராஜசிக பதார்த்தங்களான மீன், புலால் போன்றவற்றை உண்பது, கோபம், ஏமாற்றம், பேராசை, தற்பெருமை, வஞ்சகம், வெறுப்பு, பொறாமை போன்றவற்றை வளர்த்து ஒருவரது தனித்தன்மையை அழிக்கும் மதுபானங்களை அருந்துவது, ஆகிய தீய குணங்களுக்கு ஒருவரை அசுத்தமான வாசனைகள் இட்டுச் செல்கின்றன. அசுத்தமான வாசனைகள் மூன்று விதமானவை: 1) உலகியலான உந்துதல்கள் 2) அறிவுரீதியான உந்துதல்கள் 3) உடல்ரீதியான உந்துதல்கள். உடல்ரீதியான உந்துதல்கள் ஒரு மனிதனை, அழகான தோற்றம், வலிமையான உடற்கட்டு, சுருக்கங்களால் ஒருபோதும் உருக்குலையாத பளபளப்பான சருமம், உருண்டு திரண்ட தசைகள் ஆகியவற்றை விரும்பச் செய்கின்றன. அறிவுரீதியான உந்துதல்கள், தானொரு இணையற்ற அறிவாளியாக அறியப்படவேண்டும், தனது துறையில் எல்லா போட்டியாளரையும் வெல்ல வேண்டும் என்று ஒருவரை ஏங்க வைக்கின்றன. உலகியலான உந்துதல்கள், பெயர்-புகழ், அதிகாரம், ஆதிக்கம், ஆடம்பரம் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஒருவரை ஏங்க வைக்கின்றன. எல்லா ஆசைகளையும் இந்த மூன்று தலைப்புகளில் வகைப்படுத்தலாம்; இவை அனைத்தும் உந்துதல்களே. இவை உங்களை பிறப்பு-இறப்பு எனும் சக்கரத்தில் (சம்சாரம்) பிணைத்து, இந்த உலகோடு கட்டிப்போட்டு விடுகின்றன. (தியான வாஹினி, அத்தியாயம்-11)
நாம் ஒரு எண்ணத்தை விதைக்கும்போது, செயலை அறுவடை செய்கிறோம். நாம் ஒரு செயலை விதைக்கும்போது, மனோபாவத்தை அறுவடை செய்கிறோம். நாம் மனோபாவத்தை விதைக்கும்போது, நம் குணநலனை அறுவடை செய்கிறோம். நாம் நம் குணநலனை விதைக்கும்போது, நம் விதியை அறுவடை செய்கிறோம். - பாபா