azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Through the power of Vak (speech) one can acquire a kingdom or great wealth. Friends and relations can be got through speech. Through speech, one gets bound and loses his freedom. Even death is brought about by speech. Speech is the life-force of human beings. Speech is the backbone of life. It is all-powerful. Saint Jayadeva addressed his tongue thus: "Oh tongue! You know all about the sweetness of speech! You enjoy truth and goodness. That is why chant the sweet and sacred names of the Lord - Govinda! Damodara! Madhava! Don't indulge in reviling anyone. Speak sweetly and softly". “Let your speech be truthful, pleasing, good and free from any resentment,” says Krishna in the Gita. Unfortunately, because such sacred and sweet speech has become scarce, society is riddled with bitterness and discord. The permissiveness of a crazy civilization has destroyed discipline and morality, and turned society into an inferno. (Divine Discourse, Jul 22, 1994)
Speak always softly, sweetly and truthfully. Do not indulge in reviling anyone. - BABA
வாக் (பேச்சு) சக்தியின் மூலம் ஒருவர் ஒரு ராஜ்யத்தையோ பெரும் செல்வத்தையோ பெறலாம். பேச்சின் மூலம் நண்பர்களையும், உறவினர்களையும் பெற முடியும். பேச்சினால் ஒருவர் கட்டுண்டு சுதந்திரத்தை இழந்துவிடுகிறார். மரணம் கூட பேச்சினால் தான் சம்பவிக்கிறது. பேச்சு, மனிதர்களின் ப்ராண சக்தியாகும். பேச்சு வாழ்க்கையின் முதுகெலும்பு போன்றது. இது மகத்தான சக்தி படைத்தது. ஜெயதேவர் தனது நாக்கை நோக்கி, “ஓ நாவே! பேச்சின் இனிமை அனைத்தையும் நீ அறிவாய்! உண்மையையும் நன்மையையும் நீ அனுபவிக்கிறாய். எனவே, கோவிந்தா! தாமோதரா! மாதவா! என்று இறைவனின் இனிமையான புனிதமான நாமங்களை உச்சரிப்பாயாக. யாரையும் நிந்திக்காதே. இனிமையாகவும் இதமாகவும் பேசு” என்று கூறினார். கிருஷ்ணர் பகவத் கீதையில், "உங்களுடைய பேச்சு உண்மையாகவும், இனிமையாகவும், நல்லதாகவும், மனக்கசப்பற்றதாகவும் இருக்கட்டும்" என்று கூறுகிறார். துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய புனிதமான இனிமையான பேச்சு அரிதாகிவிட்டதால், வெறுப்பிலும் அசாந்தியிலும் சமுதாயம் சிக்கியுள்ளது. பைத்தியக்கார நாகரிகத்தின் அத்துமீறிய போக்கு ஒழுக்கத்தையும் சீலத்தையும் அழித்து, சமுதாயத்தை ஒரு தீக்கோளமாக மாற்றிவிட்டது. (தெய்வீக அருளுரை, ஜூலை 22, 1994)
எப்போதும் இதமாகவும், இனிமையாகவும், உண்மையாகவும் பேசுங்கள். யாரையும் நிந்திப்பதில் ஈடுபடாதீர்கள். - பாபா