azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 12 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 12 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
I’ve come to light the lamp of love in your hearts, to see that it shines day by day with added lustre! I haven’t come to speak on behalf of any particular dharma like Hindu Dharma. I haven’t come on any mission of publicity for any sect, creed or cause; nor have I come to collect followers for any doctrine! I have no plan to attract disciples or devotees into My fold or any fold. I have come to tell you of this Universal unitary faith, this Atmic principle, this path of love, this dharma of love, this duty of love, and this obligation to love! All religions teach one basic discipline - removal from the mind the blemish of egoism, and of running after little joy. Every religion teaches man to fill his being with the Glory of God, and evict the pettiness of conceit. It trains him in methods of detachment and discrimination, so that he may aim high and attain liberation. Believe that all hearts are motivated by One and Only God. (Divine Discourse, Jul 04, 1968)
Widen your vision. Make your love expand to cover the whole of humanity. - BABA
உங்களுடைய இதயங்களில் ப்ரேமஜோதியை ஏற்றி வைத்து, அது நாளுக்கு நாள் புத்தொளியுடன் பிரகாசிக்கச் செய்வதற்காகவே நான் வந்துள்ளேன். நான் இந்து மதம் போன்ற எந்த ஒரு குறிப்பிட்ட தர்மத்தின் சார்பாகவும் பேசுவதற்கு வரவில்லை. வேறெந்த மதப்பிரிவுகள், சமயநெறிகள், பிற நோக்கங்கள் போன்றவற்றின் விளம்பரத்திற்காகவும், வேறெந்த சித்தாந்தத்தைப் பின்பற்றுவோரை திரட்டுவதற்காகவும் நான் வரவில்லை. சீடர்களை அல்லது பக்தர்களை என்னிடமோ அல்லது வேறெங்கோ ஈர்க்கும் திட்டம் எதுவும் என்னிடமில்லை. உலகளாவிய ஏகத்துவ மதம், ஆத்ம தத்துவம், ப்ரேம மார்க்கம், அன்பின் கடமை, அன்பு செலுத்த வேண்டிய கடமை ஆகியவற்றைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக வந்துள்ளேன். அனைத்து மதங்களும் ஒரே அடிப்படை ஒழுக்கத்தை, அதாவது, மனதில் இருந்து அகங்காரத்தின் கறையை போக்குவது, சிற்றின்பத்தின் பின் ஓடுவதை தவிர்ப்பது ஆகியவற்றைப் பற்றியே போதிக்கின்றன. மனிதனுக்கு, கடவுளின் மகிமையால் தன்னை நிறைத்துக் கொள்வதற்கும், அகந்தையின் அற்பத்தனத்தை அகற்றுவதற்கும் ஒவ்வொரு மதமும் கற்றுக்கொடுக்கிறது. அது அவனுக்கு பற்றின்மை மற்றும் பகுத்தறிவு முறைகளில் பயிற்சியளிக்கிறது; அதன் மூலம் அவன் உயர்வான இலக்கை அடைய முயன்று மோக்ஷத்தை பெறலாம். எல்லா இதயங்களும் அந்த இறைவன் ஒருவனால் மட்டுமே ஊக்குவிக்கப்படுகின்றன என்பதை நம்புங்கள். (தெய்வீக அருளுரை, ஜூலை 04, 1968)
உங்கள் பார்வையை விசாலமாக்குங்கள். மனிதகுலம் அனைத்தையும் அரவணைக்குமளவுக்கு உங்களுடைய ப்ரேமையை விரிவடையச் செய்யுங்கள். - பாபா