azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 06 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 06 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Kabir was weaving a yellow silk garment for his Lord Rama. He had to work the loom alone, by hand. He recited “Rama Rama Rama” and went on weaving ceaselessly. The cloth became twenty yards long, but Kabir didn’t stop. His penance continued unabated, and the garment was becoming longer. The bliss of the craft and devotion to his Lord was enough food and drink for his sustenance! When he gave it to the temple priest for clothing the idol of Rama, the garment was just the right length and breadth, not a finger breadth more! Such men are the mainsprings of the joy that spiritual persons fill themselves with, in India. The home must resound to the name of Govinda; otherwise, it is just a cave (Guha), where wild animals dwell. The body needs a house, but your body is itself a house. In that house too, the Name of Govinda must be heard, or else it is a mud-pot (Ghata), not a human body! (Divine Discourse, Feb 08, 1963)
Your homes must be immersed in the highest peace, undisturbed by any streak of hatred or malice, pride, or envy. - BABA
கபீர் தனது பகவானான ராமருக்கு மஞ்சள் நிற பட்டாடையை நெய்து கொண்டிருந்தார். அவர் தனியாகவே கைத்தறியில் வேலை செய்ய வேண்டியிருந்தது. “ராம ராம ராம” என்று இடைவிடாது ஜபித்துக் கொண்டே நெய்து கொண்டிருந்தார். துணி இருபது கஜ நீளம் ஆகிவிட்டது, ஆனால் கபீர் நிறுத்தவேயில்லை. அவருடைய தவமும் தொடர்ந்து கொண்டே இருந்தது, ஆடையும் நீண்டு கொண்டே இருந்தது. தொழிலின் ஆனந்தமும், இறைவனிடம் பக்தியும், அவரது வாழ்வாதாரத்திற்குப் போதுமான நீராகவும் ஆகாரமாகவும் இருந்தது! அந்த வஸ்திரத்தை ராமருக்கு சாற்றுவதற்காக கோயில் அர்ச்சகரிடம் அவர் கொடுத்தபோது, அது சரியான அளவில் இருந்தது, இம்மியளவு கூட மிகுதியாக இல்லை! பாரதத்தில், இத்தகைய மாமனிதர்களே ஆன்மிக சாதகர்கள் திளைத்திடும் ஆனந்தத்தின் ஊற்றாக விளங்குகின்றனர். இல்லத்தில் (gruha - க்ருஹம்) கோவிந்த நாமம் ஒலிக்க வேண்டும்; இல்லையெனில், அது காட்டு விலங்குகள் வாழ்கின்ற குகை (guha) போன்றதே. உடலுக்கு ஒரு இல்லம் தேவை; ஆனால் உங்களுடைய உடலே ஒரு இல்லம் தான். அந்த இல்லத்திலும் கோவிந்த நாமம் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும், இல்லையேல் அது மனித உடலல்ல, மண் பானையே (கடம்)! (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 08, 1963)
உங்களுடைய இல்லங்கள், வெறுப்பு, வன்மம், பேராசை, பொறாமை ஆகியவற்றின் எந்தச் சுவடாலும் பாதிக்கப்படாத பிரசாந்தியில் ஆழ்ந்திருக்க வேண்டும். - பாபா