azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 04 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 04 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Just as many varieties of fish, crabs and aquatic creatures move about inside a big tank, multitudes of human beings move about in the sea called the Lord. This is indeed a very awesome scene. Some are undeveloped, some underdeveloped; they swim around, greedy and selfish. In the midst of this crowd of ignorant beings are a few highly developed souls, the wise (jnanis) and yogis. Since they are mixed up with the ignorant crowd, it becomes difficult to distinguish the wise from the others. This creation, and the wonder with which it is filled, is really a source of amazement. But considering present conditions, there are very few who watch for light and are guided by light. So, instead of following this person and that, and taking devious roads and getting lost, it is best to place full faith in the Lord Himself and rely on Him as the only mother, father, guru, and guide. Then you will never lose the right path. He will never direct you to the wrong path. (Dhyana Vahini, Ch 10)
Once you have secured a Guru, leave everything to him, even the desire to achieve liberation. - BABA
ஒரு பெரிய குளத்தினுள் பல்வேறு வகையான மீன்கள், நண்டுகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் அங்குமிங்கும் திரிவதைப் போல, பரமாத்மா எனும் கடலில் எண்ணற்ற மனிதர்கள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சி மிகவும் பயங்கரமானது. சில பக்குவமடையாத, அரைகுறையாக பக்குவமடைந்த ஜீவன்கள் பேராசையுடனும் சுயநலத்துடனும் அங்குமிங்கும் திரிந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த அஞ்ஞானிகளுடைய கூட்டத்தின் மத்தியில், சில ஜீவன் முக்தர்களும், ஞானிகளும், யோகிகளும் இருக்கிறார்கள். இந்த அஞ்ஞானிகளுடன் அவர்கள் கலந்து இருப்பதால், யார் ஞானிகள், யார் அஞ்ஞானிகள் என்று அடையாளம் காண்பது கடினமாக இருக்கிறது. விந்தைகளும், விசித்திரங்களும் நிறைந்த இந்தப் படைப்பு உண்மையில் ஆச்சரியகரமானதே. ஆனால், இன்றைய நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், ஞானஒளியை காண்பிக்கக்கூடியவர்கள் வெகு சிலரே. எனவே, அவரையோ இவரையோ எவரையோ பின்பற்றி தவறான வழிகளில் செல்வதை விட, பரமாத்மா மீது பரிபூரண நம்பிக்கை வைத்து, அவனையே தாய், தந்தை, குரு மற்றும் வழிகாட்டியாகச் சார்ந்திருப்பது சாலச்சிறந்ததாகும். பின்னர் நீங்கள் ஒருபோதும் சரியான பாதையைத் தவறவிட மாட்டீர்கள். அவனும் ஒருபோதும் உங்களுக்குத் தவறான பாதையைக் காண்பிக்க மாட்டான். (தியான வாஹினி, அத்தியாயம்-10)
நீங்கள் ஒரு குருவைப் பெற்றவுடன், மோக்ஷம் பெற வேண்டும் எனும் ஆசையையும் சேர்த்து எல்லாவற்றையும் அவரிடமே விட்டுவிடுங்கள். - பாபா