azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 29 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 29 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The mother is the pillar of the home, of society, of the nation, and so of humanity itself. Mothers should know the secret of mental peace, inner silence, spiritual courage and contentment which is the greatest wealth, and also of spiritual discipline, which gives lasting joy. The mother should teach the children the value of remembering the Name of God and of mental and physical cleanliness. She should be like the mother in the story told by Vivekananda, who advised her son to call upon Krishna in the woods while going to school alone and whenever he is helpless. The father and the mother must supplement at home the training given by the teacher at school. They must acquaint themselves with the lesson the child receives at the school and see that their conduct and advice do not conflict with what the child learns from the teacher whom he adores. Teachers and parents must see that children learn certain good habits and attitudes during these formative years. (Divine Discourse, Sep 09, 1958)
Prema directed to the Lord is called devotion, and it is the easiest of all paths. - BABA
வீடு, சமுதாயம், தேசம் ஆகியவற்றிற்கு தாய் தூண் போன்றவள்; மனிதகுலத்திற்கும் சேர்த்துத்தான். மன அமைதி, அகச்சாந்தி, ஆன்ம வலிமை, பெரும் செல்வமான மனநிறைவு, மேலும் நிலையான ஆனந்தமளிக்கும் ஆன்மிக சாதனை ஆகியவற்றின் ரகசியத்தை தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டும். இறைவனது திருநாமத்தை நினைவுகூர்வது, மனம் மற்றும் உடல் தூய்மை, ஆகியவற்றின் மதிப்பை குழந்தைகளுக்கு தாய் உணர்த்த வேண்டும். விவேகானந்தர் ஒரு கதையில் சொன்னவாறு, காட்டின் வழியாக தனியாக பள்ளிக்குச் செல்லும்போதும், துணைக்கு யாரும் இல்லாதபோதும், கிருஷ்ணனைக் கூப்பிடுமாறு தன் மகனுக்கு அறிவுரை கூறிய தாயைப் போல் அவள் இருக்க வேண்டும். பள்ளியில் ஆசிரியர் கொடுக்கும் பயிற்சிக்கு வீட்டில் தாய் தந்தையர் உறுதுணையாக இருக்க வேண்டும். பள்ளியில் குழந்தை கற்கும் பாடத்தை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும்; அவன் மதிக்கும் ஆசிரியரிடமிருந்து குழந்தை கற்கும் பாடத்திற்கு பெற்றோரின் நடத்தையும் அறிவுரைகளும் முரண்படாமல் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். வளரும் பருவத்தில் சில நல்ல பழக்கவழக்கங்களையும் மனப்பாங்குகளையும் குழந்தைகள் கற்றுக்கொள்வதை ஆசிரியர்களும் பெற்றோரும் உறுதி செய்ய வேண்டும். (தெய்வீக அருளுரை, செப் 09, 1958)
இறைவனிடம் செலுத்தப்படும் ப்ரேமை, பக்தி என்று அழைக்கப்படுகிறது; அனைத்து பாதைகளிலும் இதுவே மிக எளிதானதாகும். - பாபா