azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 23 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 23 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Love directed to the Lord is called devotion, and it is the easiest of all the paths to realise the goal. Devotion can be spoken of as having several stages. There is the stage where service of the Lord alone matters and is its own reward! The devotee does not seek anything more than just service of the highest, done to the utmost of one’s capacity. This gradually becomes the stage where nothing except the Name and Form of the Beloved is cognised! For treading the path of devotion, one needs no scholarship or wealth or riches or ascetic rigours. Tell Me, what was the lineage of robber-turned-sage Valmiki, the wealth of Kuchela, scholarship of Sabari, the age of Prahlada, the status of Gajaraja, the attainments of Vidura? Love! That was all they had, and that was all they needed! (Divine Discourse, Mar 24, 1958)
The power of love can transform earth into sky and sky into earth. There is nothing in this world that cannot be achieved by love. - BABA
இறைவனிடம் செலுத்தப்படும் ப்ரேமை, பக்தி என்று அழைக்கப்படுகிறது; வாழ்வின் இலக்கை அடைவதற்கான அனைத்து பாதைகளிலும் இதுவே மிக எளிதானதாகும். பக்தி என்பது பல நிலைகளைக் கொண்டது எனக் கூறலாம். அதில் ஒரு நிலையாக, இறைவனுடைய சேவையே முக்கியமானது, அதுவே அதன் பலனும் கூட என்று உள்ளது. தன்னால் முடிந்தவரை பரமாத்மாவுக்கு ஆற்றும் சேவைக்கு மேல் பக்தன் வேறு எதையும் நாடுவதில்லை. இது படிப்படியாக இறைவனுடைய நாமரூபத்தைத் தவிர வேறு எதையும் உணராத நிலையாக மாறிவிடுகிறது! பக்தி மார்க்கத்தில் செல்வதற்கு, ஒருவருக்கு அறிவாற்றலோ, செல்வமோ, வளங்களோ, கடுமையான நியமங்களோ தேவையில்லை. வழிப்பறித்திருடனாக இருந்து மஹரிஷியாக மாறிய வால்மீகியின் வம்சம், குசேலரின் செல்வம், சபரியின் அறிவாற்றல், பிரகலாதனின் வயது, கஜராஜனின் தகுதி, விதுரரின் சாதனைகள் ஆகியவை என்னென்ன என்று கூறுங்கள் பார்ப்போம்? ப்ரேமையே! அவர்களிடம் இருந்ததெல்லாம் அது ஒன்றே, அவர்களுக்குத் தேவைப்பட்டதும் அது மட்டுமே! (தெய்வீக அருளுரை, மார்ச் 24, 1958)
ப்ரேமையின் சக்தி பூமியை வானமாகவும், வானத்தை பூமியாகவும் மாற்ற வல்லது. ப்ரேமையால் அடைய முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. - பாபா