azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
It is best to place full faith in the Lord Himself and rely on Him as the only mother, father, guru, and guide. Then you’ll never lose the right path. He’ll never direct you to the wrong path. To have that firm faith and that experience, take to meditation; that’s the only means. It’s enough if the Name and form of the Lord is meditated upon with love and faith. Choose the name and form you like most. Be ever joyful and sweet. Cultivate the quality of always being joyful, with a smile on your face; this will give you a good distinction. People will also like you more. The Lord will also have joy upon seeing you. Therefore, observe meditation with innocence, purity, and humility. Then, without fail, you can attain whatever you strive for. Do not lose your temper in any situation; do not lose courage in any contingency. Respect everyone, whatever their status. Then the quality of universal love (prema) will develop in you. (Dhyana Vahini, Ch 10)
In this troubled world, deem God as your sole protector and guide. - Baba
பரமாத்மா மீது பரிபூரண நம்பிக்கை வைத்து, அவனையே தாய், தந்தை, குரு மற்றும் வழிகாட்டியாகச் சார்ந்திருப்பது சாலச்சிறந்ததாகும். பின்னர் நீங்கள் சரியான பாதையைத் தவறவிடவே மாட்டீர்கள். அவனும் உங்களுக்குத் தவறான பாதையைக் காண்பிக்கவே மாட்டான். இத்தகைய திடநம்பிக்கையையும் அனுபவத்தையும் பெறுவதற்கு தியானத்தைக் கடைப்பிடியுங்கள்; அதுதான் ஒரே வழி. இறைநாம ரூபத்தை ப்ரேமையுடனும் நம்பிக்கையுடனும் தியானித்தாலே போதுமானதாகும். உங்களுக்கு மிகவும் பிடித்த இறைநாம ரூபத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு எப்போதும் மகிழ்ச்சியுடனும், இனிமையாகவும் இருங்கள். எப்போதும் ஆனந்தமாக சிரித்த முகத்துடன் இருக்கும் பண்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்; இது உங்களுக்கு சிறந்த தனித்தன்மையை அளிக்கும். மக்களும் உங்களை அதிகமாக நேசிப்பார்கள். இறைவனும் உங்களைக் கண்டு மகிழ்ச்சியுறுவான். கள்ளங்கபடமின்றி, தூய உணர்வுடன், பணிவுடன் தியானம் செய்யுங்கள். அப்போது உங்கள் மனவிருப்பங்களை தவறாமல் நிறைவேற்றிக்கொள்ளலாம். எந்த சூழ்நிலையிலும் கோபப்படாதீர்கள்; எந்த சந்தர்ப்பத்திலும் தைரியத்தைக் கைவிடவேண்டாம். அனைவரையும், அவர்களுடைய அந்தஸ்து எதுவாயினும், மதியுங்கள். பின்னர் அனைவரையும் சமமாக நேசிக்கும் உலகளாவிய ப்ரேமை உங்களுள் அபிவிருத்தி அடையும். (தியான வாஹினி, அத்தியாயம்-10)
குழப்பம் நிறைந்த இவ்வுலகில், இறைவனையே உங்களுடைய ஒரே பாதுகாவலனாகவும், வழிகாட்டியாகவும் கருதுங்கள். - பாபா