azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The Lord is manifest in the picture or image that one worships, but is this due to any special excellence of the picture or image? No. The picture, the photo, the image — these are and remain as picture, photo, and image. The fact is that on account of the intensity of the devotion of the devotee, the Lord cannot desist from manifesting Himself for that person. For that reason, He assumes — in stone, wood, or paper — the form that the devotee contemplates and meditates upon and worships. But you have to pray to the Lord with one-pointed concentration. This type of single-mindedness comes only out of the pure quality (satwa-guna), and that again is the product of meditation. Therefore, you must cultivate good qualities, and in order to develop these, you should desire the company of the good (satsang). Your real companions, from whom you derive the maximum good, are those who talk and discourse about the Lord, about truth, about the service of others, and about love that considers all as equal. (Dhyana Vahini, Ch 9)
In order to fulfill the yearning of the devotee, Hari, the Immanent Basic Being of the Universe, will come in any form, in anything, at any place. - BABA
ஒருவர் வழிபடும் படத்திலிருந்தோ விக்ரஹத்திலிருந்தோ பகவான் தோன்றுவது, அந்தப் படம் அல்லது விக்ரஹத்தின் விசேஷமான குணத்தினாலா? இல்லை. அந்தப் படம் படமாகவும், அந்த விக்ரஹம் விக்ரஹமாகவும் தான் இருக்கிறது. பக்தனின் தீவிரமான ஆழ்ந்த பக்தியின் காரணமாக, பரமாத்மாவால் தனது பக்தனுக்காக வராமல் இருக்க முடியாது. பக்தன், தியானித்து, பூஜிக்கும் ரூபம் - அது கல்லோ கட்டையோ காகிதமோ எதுவானாலும் - அவன் அந்த ரூபத்தில் அருள்பாலிக்கிறான். ஆனால், இதற்கு நீங்கள் ஒருமித்த மனக்குவிப்புடன் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். இந்த ஒருமித்த மனக்குவிப்பு சாத்வீக குணத்திலிருந்தே வருகிறது; அதுவும் தியானத்திலிருந்து வந்த பலனேயாகும். எனவே, நீங்கள் நற்குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இவற்றை அபிவிருத்தி செய்துகொள்ள நல்லோரின் சேர்க்கையை (ஸத்ஸங்கம்) நாட வேண்டும். இறைவனைப் பற்றியும், சத்தியத்தைப் பற்றியும், சேவையைப் பற்றியும், எல்லோரையும் சமமாக பாவிக்கும் ப்ரேமையைப் பற்றியும் பேசி உரை நிகழ்த்துவோரிடமிருந்துதான் நீங்கள் மிகுந்த பயனைப் பெற முடியும்; அவர்களே உங்களுடைய உண்மையான நண்பர்கள். (தியான வாஹினி, அத்தியாயம்-9)
பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, பிரபஞ்சத்தின் மூலாதாரமான ஹரி, எந்த ரூபத்திலும், எதிலும், எந்த இடத்திலும் தோன்றுவான். – பாபா